பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா கூக ாகஇ

எனவரும் இறையனார் களவியற் சூத்திரம் இத் தொல்காப்பிய நூற்பாவை அவ்வாறே தன்னகத்து எடுத்தாண்டுள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணர்தற்குரியதாகும்.

  1. శ్రీష్ தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல்

எத்திறத் தானும் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த இரண்டலங் கடையே.

இளம் பூரணம்: இது தலைவிக் குரியதோர் மரபுணர்த்திற்று.

(இ-ன்.) தலைவன் முன்னர்த் தன்னைப் புகழுங் கூற்று அவ்வழியானுங் கிழத்திக்கு இல்லை; முற்படக் கூறிய இரண்டி உமும் அல்லாத வழி யென்றவாறு.

அவையாவன தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தவழி இரத்தலுந் தெளித்தலும் என அகத்திணையியலுட் கூறிய இரண் டும். அவ்வழிப் புகழ்தலாவது : -

ஒருஉநீ எம்.கூந்தல் கொள்ளல் யாம் நின்னை வெரூஉதுங் காணுங் கடை’’ (கலித். எ.டி)

என்ற வழித் தன்னை உயர்த்துக் கூறு தலாற் புக்ழ்ந்தாளாம்:நின்னை வெருவாதார் பிறர் என்னும் உள்ளக்கருத்தினால்.

நீகூறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு' (கலித். அஆ)

என்ற வழியும் பெண்டிர் பலர் உளராயினும் அவர் எல்லார் மாட்டுஞ் செல்லாது தன்மேல் வருமெனக் குறித்தாளாதலின், தன்னைப் புகழ்ந்தாளாம். பிறவுமன்ன. (ங்க)

நச்சினார்க்கினியம் ; இது, தலைவியிலக்கணங் கூறுகின்றது. (இ. ள்.) தற்புகழ் கிளவி கிழவன்முன் கிளத்தல்-தன்னைப் புகழ்ந்துரைத் தலைக் கிழவன் முன்னர்ச் சொல்லுதல்; எத்திறத் தானுங் கிழத்திக்கு இல்லை-நனிமிகு சீற்றத் துனியினும் தலைவிக்கு

1. முற்பட வகுத்த இரண்டாவன.

'பரத்தையின் அகற்சியிற் பரிந்தோட்குறுகி

இரத்தலும் தெளித்தலும் என இருவகை’ (அகததனை . கங்) என அகத ணையியலிற் கூறப்பட்ட இரத்தலும் தெளித்தலும் ஆகிய இரண்டுமாகும்.