பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fశ్రీశ్రీ தொல்காபபியம - பொருளதிகாரம்

இல்லை; முற்பட வகுத்த இரண்டலங்கடையே முன்பு கூறுபடுத் தோதிய தாய்போற் கழறித் தழி இக் கோடலும் அவன் சோர்பு காத்தற்கு மகன்ரு யுயர்பு தன்னுயர் பாதலும் அல்லாவிடத்து {F-剑) - கிழத்திக்கில்லையென முடிக்க. அவ்விரண்டிடத்துந் தனது குணச்சிறப்பைக் குறிப்பால் தலைவன்முன்னே புகழ்வாள்போல ஒழுகினாளென் றுணர்க.

இனி முற்படவகுத்த இரண்டு’ என்பதற்கு, 'இரத்தலுந் தெளித்தலும்’ (தொல். அகத் 41) என அகத்திணையியலுரு கூறியனவென்றுமாம். தலைவன் முன்னர் இல்லையெனவே அவன் முன்னர் அல்லாதவிடத்துப் புகழ்தல் பெற்றாம். அவை காமக் கிழத்தியரும் அவர்க்குப் பாங்காயினாருங் கேட்பப் புகழ்தலாம்.

பேணு தகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும் என்னோடு புரையுந ளல்லள் தன்னோடு புரையுநர்த் தானறி குநளே’ எனப் பதிற்றுப்பத்தில் வந்தது.

ஆய்வுரை . இது மனை யறத்தினை நிகழ்த்தும் தலைவிக்கு இன்றியமையாததோர் திறம் கூறுகின்றது.

(இ-ள்) தலைவன் முன்னர்த் தன்னைப் புகழ்ந்துரைக்குங் கூற்று எவ்வகையாலும் தலைவிக்கு இல்லை, முன்னர் வகுத் துரைத்த இரண்டிடங்களும் அல்லாதவிடத்து எ~று.

முன்னர் வகுத்துரைத்த இரண்டிடங்களாவன : தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தவழி தலைமகளை அணுகி இரத்தலும் தெளித்தலும் என முன்னர் அகத்திணை சச ஆம் சூத்திரத்திற் குறிக்கப்பட்ட இரண்டிடங்கள் என இளம்பூரணரும், தாய்போற்

&rk

1 முற்படவகுத்த இரண்டு என்பன :

கவுவொடு மயங்கிய காலை தாய்போற்கழறித் தழீஇக் கோடலும். அவன்சோர்புகாத்தல் கடனெனப்படுதலின் மகன்தாயுயர்பு தன்னுயர் பாதலும் என இரண்டிடங்கள் என கச்சினார்க்கினியரும்,

'பரத்தையிற் பிரிங்து வந்தவழி இரத்தலும் தெளித்தலும் என அகத்தினையியலுட் கூறிய இரண்டு' ண ன் இளம்பூரணரும் கூறுவர்.