பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்பியல் நூற்பா சம் ÏÎÎëåëî'

கழறித்தாழிக்கேடலும் (ங்ச) என இவ்வியலில் முற்கூறப்பட்ட இரண்டிடங்கள் என நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவர். முற்பட வகுத்த இரண்டு' என்பதற்கு இரத்தலும் தெளித்தலும்' என அகத்திணையியலுட் கூறியனவென்றுமாம்” என நச்சினார்க்கினி யர் இளம்பூரணர் கருத்தினையும் ஏர்றுக்கொள்ளுதலால், பரத் தையிர் பிரிந்து வந்துழித் தலைவன் தலைவியை இரத்தலும் தெளித்தலும் ஆகிய இரண்டிடங்கள் எனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். இவ்விரண்டிடங்களிலும் தலைவி தி ன்னைப்புகழ்தலும் தகும் என்பது கருத்து.

இத் தொல்காப்பிய நூற்பாவின் பொருளை உளங்கொண்டு சழத்தி கிழவோன் முன்னர் த தன்னைப் புகழ்தல் புலவிக்காலத் திலும் தக்கதன்று என வற்புறுத்தும் முறையில் அமைந்தது,

கிழவோன் முன்னர்க் கிழத்தி தற்புகழ்தல் புலவிக் காலத்தும் புரைவதன்றே" (ங்எ)

என வரும் இறையனார்களவியற் சூத்திரமாகும்.

சல், கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி

கிழவோன் வினைவயின் உரிய என்ப.

இளம் பூரணம் : இது, தலைவற் குரியதொரு மரபுணர்த்திற்று

(இ- ள். தலைவி முன்னர்த் தலைவன் றன்னைப் புகழுங் சுற்று வினை.வயிற் பிரியும் வழி புரிய என்றவாறு:

இல்லென இரத்தோர்க்கொன் lயாமை இழிவு’ (கலித்...) என்றும்,

இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையால் புகழ்"

என்றும் இவ்வாறு கூறுதல், இவ்வாறு கூறவே யான் செய்யேன்" எனத் தன்னைப் புகழ்ந்தவாறாம். (4-0)

1. வினை.வயிற்பிரிபுக் தலைவன் தனது பிரிவினைத் தலைவி ஆற்றியிருத் தற் பொருட்டுத் தான் எடுத்துக் கொண்ட வினையை எளிதில் முடித்து விரைவில் திரும்புதல் திண்ணம் என்பதனைத் தலைவி மனங்கொள்ளுதல் வேண்டித் தனது வினையாண்மையைத் தலைவிமுன்னர்ப்புகழ்ந்து கூறுதல் தவறாகாது என்பதக்,

2. யான் இளிவெய்தேன்' என்றிருத்தல் பொருத்தமாகும்.