பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாக அ; தொல்காப்பியம்-பொருளதிகாரம்

நச்சினார்க்கினியம்: இது, தலைவன் தன்னைப் புகழ்ந் துரைக்கும் இடம் இன்னுழி என்கின்றது.

(இ-ள்.) கிழவி முன்னர்க் கிழவோன் தற்புகழ் கிளவி - தலைவிமுன்னர்த் தலைவன் தன்னைப் புகழ்ந்து கூறுங் கூற்று; வினை.வயின் உரிய என்ப-காரியங்களை நிகழ்த்துங் காரணத் திடத்து உரியவென்று கூறுவார் ஆசிரியர் (எ-று.}

அக் காரணமாவன, கல்வியுங், கொடையும், பொருள் செய லும், முற்றகப்பட்டோனை' முற்றுவிடுத்தலுமாகிய காரியங்களை நிகழ்த்துவலெனக் கூறுவன. இவ் வாள்வினைச் சிறப்பை யான் எய்துவலெனத் தன்னைப் புகழவே அதுபற்றித் தலைவி பிரி வாற்றுதல் பயனாயிற் று.

"இல்லென இரந்தோர்க்கொன் lயாமை யிளிவென' (கலி. 2) என்றவழி யான் இளிவரவு எய்தேனென்றலிற் புகழுக்குரியேன் யானேயெனக் கூறியவாறு காண்க. ஏனையவும் வந்துழிக் 母fGö7茨。 . (4:0)

ஆய்வுரை : இது, தலைவர்குரியதோர் திறம் உணர்த்து கின்றது.

(இ-ள்) தலைவியின் முன்னர்த் தலைவன் தன்னைப் புகழ்ந்துரைக்குஞ் சொல், தலைவன் வினை.வயிற் பிரிந்து செல் லுங்கால் கூறு தற்கு உரிய எ-று.

பொருளிட்டுதலும் போரிற் பகைவரை வென்றிகோடலும் முதலாக வுள்ள வினையினை நிறைவேற்றுதல் வேண்டித தலைவி யைப் பிரிந்து செல்லும் தலைவன், தனது பிரிவுக்கு ஆற்றாளாய்க் சென்றவிடத்துத் தலைவற்கு என்ன தீங்குநேருமோ என அவன் பால் வைத்த அன்பு காரணமாக அஞ்சுத லியல்பாதலின் அவள் மனத்துத் தோன்றிய அச்சத்தினை அகற்றும் நோக்கத்துடன் தனது ஆற்றலையெடுத்துக் கூறித் தான் வினைமுடித்து வருதல் உறுதி எனத் தன்னைப் புகழ்ந்துரைத்தல் தவறாகாது என்பதாம்.

1. "வினை’ என்றது, காரியங்களை கிகழ்த்தும் காரணம் என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது.

2, முற்றகப்பட்டோன் . பகைவேக்தரால் மதிலைச் சூழ்ந்து அகப்படுத்திக் கொள்ளப்பட்ட மதிலகத்து வேந்தன்.

8. முற்றுவிடுத்தல் . மதிற்புறத்தே சூழ்ந்து வளைத்து கிற்கும் பகைவர் சேனையை வென்று அதன் பிடிப்பினின்றும் விடுவித்தல்.