பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா - శ్రీః శ్రీ

நச்சினார்க்கினியம்: இது முதலூழியில் வேளாளர்க்கு உரிய தோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ - ள்.) மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம். வேதநூல்தான் அந்தணர் அரசர் வணிகரென்னும் மூவர்க்கும் உரியவாகக் கூறிய கரணம்; கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டு-அந்தணர் முதலியோர்க்கும் மகட் கொடைக்குரிய வேளாண் மாந்தர்க்குந் தந்திர மந்திர வகையான் உரித்தாகிய காலமும் உள. (எ . று, ) - .

எனவே, முற்காலத்து நான்கு வருணத்தார்க்குங் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அஃது இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளர்க்குத் தவிர்ந்தது என்பது உந் தலைச்சங்கத் தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்ருகச் செய்யுள் செய்தார் என்பது உங் கூறியவாறாயிற்று. உதாரணம் இக்காலத்திலின்று.

கீழோர்க்கு ஆகியகாலமும்’ என்புழி ஆகிய என்பதற்கு மாறாகத் தவிர்ந்த எனக் கருத்துரை வரைதல் உரைகெறிக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். -

1.இவ்வுரையும்விளக்கமும் முற்குறித்த இளம்பூரணர் உரையினை அடியொற்றி விண்மங்தன. இளம்பூரணர் பிற்காலம்’ எனக்குறித்ததனை “இரண்டாம் ക്ഷഴ്സ് இர இ .

கச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலோர் மூவர் அந்தணர் அரசன் வணிகர் என்னும் மூவர் என்பதும் கீழோர் வேளாளர் என்பதும் இருவ ருரைகளிலும் பொதுவாக அமைந்தனவே. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் என்பதற்கு வேதநூல் அக்தணர் அரசர் வணிகர் என்னும் மூவகை வருணத்தார்க்கும் வகுத்துக்ககூறிய வேத நூற்கரணம்’ எனக் கரணத்தை வேதத்தொடு தொடர்புடையதாகக் கொள்கின்றார் கச்சினார்க் *ளியர். “கீழோர்க்கு ஆகிய காலம் என்பதற்கு, மூவகை வருணத்தார்க்கும் மகட்கொடைக்குரிய வேளாண்மாக்தர்க்குக் தந்திரமந்திர வகையால் உரித்தாகிய ஆதியூழியாகிய காலம் எனவும், அக்காலத்தில் தலைச்சங்கத்தாரும் முதனூலாசி கூறிய முறையே கால்வகை வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தாராதலின், அக்காலத்தினைக் கீழோர்க்கு ஆகிய காலம்’ என்றார் எனவும், ஆகிய காலம்’ என இறந்தகாலச் சொல்லால் தொல்காப்பியனார் குறிப்பிடுதலால் ஆசிரியர் இந்நூல் செய்கின்ற ஆதியூழியின் அந்தமாகிய இரண்டாம் ஊழி தொடங்கி வேத நூற்கரணம் வேளாளர்க்குத் தவிர்ந்தது எனவும் விளக்கும் முறையில் அமைந்தது கச்சினார்க்கினியர் எழுதிய இவ்வுரைப் பகுதியாகும்.

மேலோர் மூவர்க்கும் அக்காலச் சான்றோர்களால் வகுத்துரைக்கப்பட்ட திருமணச் சடங்கு என்ற கருத்திற் புணர்த்தகரணம் எனப் பொதுப்படக் கூறிய தன்றி அருமறைபுணர்த்தகரணம் என ஆசிரியர் சிறப்பு முறையில் தெரித்து