பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் நூற்பா சசு ஐ.f'இ

ஆய்வுரை : இது, தலைமக்களுக்குரியதோர் திறம் உணர்த்து கின்றது.

(இ - ள்) பரத்தை காரணமாகப் பிரிந்தபிரிவின்கண் தலை விக்குப் பூப்புத்தோன்றிய பன்னிருநாட்களும் தலைவியை விட்டுப்

பிரிந்துறையமாட்டார்கள் தலைமக்கள் என்பர் புலவர் எ-று.

பரத்தையிற் பிரிந்த கிழவோன் மனைவி

பூப்பின் புறப்பா டீராறு நாளும் நீத்தகன் றுறைதல் அறத்தாறன்றே’’ (சங்)

என வரும் இறையனார் களவியல் நூற்பா இத்தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியமைந்ததாகும்.

பூப்பின்புறப்பாடு ஈராறுநாளும்’ என்ற தொடர்க்குப் பூப்புத் தோன்றி மூன்றுநாள் கழிந்த பின்பு பன்னிரண்டுநாளும்’ என இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பொருள்கொண்டனர். பூப்புப்புறப்பட்ட நாள்முதல் பன்னிருநாளும், எனப்பொருள் கொள்வர் இறையனார் களவியலுரையாசிரியர்.

பரத்தையிர்பிரிந்த தலைமகன் தலைமகள் பால் பூப்பு நிகழ்ந்தது உணர்ந்து வாயில்களோடும் சென்று தலைமகளிடத் தானாய்ப் பூப்புநிகழும் மூன்றுநாட்களிலும் தலைவியை அணுகாது அவளது சொற்கேட்கும் அணிமையிடத்தானாய் உரையவே பரத்தையிற் பிரிந்தானென்றபொறாமை தலைமகள் மனத்தை விட்டுநீங்கும், அதன்பயனாக மூன்று நாட்கழித்துத் தலைமகளைக் கூடப்பெறுவன். அந்நிலையில் தோன்றிய கரு மாட்சிமைப்படும், பூப்பு நிகழும் மூன்றுநாட்களிலும் தலைமகன் மனைக்கண் வாரா னாயின் தலைமகள் உள்ளத்தே வெகுளிதோன்றி உடல் வெப்பத்தை யு ளதாக்கும். அந்நிலையிர் கரு. மாட்சிமைப்படாது. ஆகவே பூப்புத்தோன்றிய மூன்று நாட்களிலும் தலைவியைத் தலைவன்கூடின் முதல் நாளில் கரு உருப்பெறாது அழியும் இரண் டாம்நாளில் கரு வயிற்றிலே சாகும்: மூன்றாம் நாளில் கரு வாழ்நாள் குறைந்த குறுவாழ்க்கையினதாம்; அது தப்பி வாழ்த தாலும் திருத்தகவுடையதாகாது என இறையனார்களவியலுரை யாசிரியர் தரும் விளக்கம் இங்கு மனங்கொளத் தகுவதாகும்.