பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஆய்வுரை : இது, பண்டைத் தமிழகத்தில் முதன்முதற் கரணம் வகுக்கப்பெற்றோர் இன்னார் எனவும் அவர்க்குரியகரணம்

ஏனையோர்க்கும் உரித்தாகிய காலம் இதுவெனவும் கூறுகின்றது.

(இ-ள்) நாடாளும் மேன்மையுடையோராகிய முடிவேந்தர் மூவர்க்கும் முதன்முதல் வகுக்கபபெற்ர திருமண நியதியாகிய கரணம அவர்கீழ்வாழும் குடிமக்களுக்கும் உரியதாய் அமைந்த, காலமும் உண்டு. எ-று.

இதன்கண் மேலோர்மூவர்' எனக் குறிக்கப்பட்டோர், போந்தை வேம்பே ஆர் என வருஉம் மா பெருந்தனையர் எனப், புறத்திணையியலிலும் 'வண் புகழ் முவர் தண்பொழில் வரைப்பு' எனச் செய்யுளியலிலும் சிறப்பித்துரைக்கப்பட்ட சேரசோழ பாண்டியர்களாகிய முடிவேந்தர் மூவருமே எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். கரணம் எனப்படும் திருமணச் சடங்குமுறை மிகப் பழைய காலத்தில் நாட்டில் எல்லா மக்களுக்கும் விதிக்கப் பெறவில்லை; படைப்புக்காலத் தொட்டுப் பண்புடன் நிலைபெற்று வரும் தமிழ் மூவேந்தர் குடும்பத்திற்கே முதன்முதல் வகுக்கப் பெற்றது. நாடாள்வேந்தராகிய அவர்தம் ஆட்சியுரிமையில் மன்ன னுக்குப்பின் அவன் மைந்தர் அரசுரிமை பெறும் முறையில் அம்மன்னனது பட்டத்தரசி முதன்மை பெறுதல் காரணமாகவே முடிவேந்தர் மூவர்க்கும் முதன்முதற் கரணம் வகுக்கப்பெற்றது.

ஒருவன் ஒருத்தி யிடையேயமைந்த காதற்கேண்மை நாள டைவிற் குறைந்து வழுவாமை கருதியும், பெற்றோர் ஈட்டிய பொருட்கு உரியராம் தாயமுறை அவர்தம் மக்கட்கேயுரியதென த் துணிதற் பொருட்டும் முறகாலத்தில் முடிவேந்தர் மூவர்க்கும் வகுக்கப்பெற்ற திருமண நியதியாகிய கரணம் அவர் கீழ் வாழும் குடிமக்களுக்கும் பிற்காலத் தில் உரியதாயிற்று என ஆசிரியர் தொல்காப்பியனார் தம்காலச் சமுதாய ஒழுகலாற்றனை இந்நாற்பாவார் புலப்படுத்திய திறம் கூர்ந்துணரத்தகுவதாகும். (க)

ச. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கர்ணம் என்ப.

ஒதாமையானும், ஆகிய காலமும் உண்டு என் புழி ஆகிய என்னும் ஆக்கச்சொல் - - - - - - . * - - - * - - ٹہ :::ہند،

'தவிர்க்த (போகிய) என எதிர்மறைப் பொருள்படாமையானும் இச்சூத்திரத்திற்கு கச்சினார்க்கினியர் கூறிய் பொருளும் விளக்கமும் ஆசிரியர் தொல்காபபியன்சர்

கருத்துக்கு முற்றிலும் முரனாதல் புலனாம்.