பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா சள

空一

密岛

கடவாது; மூன்று இறவாது . அக் கல்வியெல்லாம் மூன்று பதத் தைக் கடவாது (எ று.) " .

இறவா தென்பதை இரண்டிடத்துங் கூட்டுக. மூன்று பதமாவன அதுவென்றும் நீயென்றும் ஆனாயென்றுங் கூறும் பதங்களாம். அவை பரமுஞ் சீவனும் அவ்விரண்டும் ஒன்றாத அம். ஆதலின் இம்மூன்று பதத்தின் கண்ணே தத்துவங்களைக் கடந்த பொருளே உணர்த்தும் ஆகமங்களெல்லாம் விரியுமாறு உணர்ந்துகொள்க. இது மூன்று வருணத்தார்க்குங் கூறினார். ஏனைய வேளாளரும் ஆகமங்களானும் அப் பொருளைக் கூறிய தமிழானும் உணர்தல் உயர்ந்தோர்க் குரிய (தொல், அகத். 31) என்பதனான் உணர்க. இஃது இல்லறம் நிகழ்த்தினார் துறவறம் நிகழ்த்துங் கருத்தினராக வேண்டுதலின் காலவரையறை கூறா ராயினார். முன்னர்க் காட்டிய "அரம்போ ழவ்வளை’ (அகம். 124) என்னும் பாட்டினுட் பானாட் கங்குலின் முனிய வலைத்தி. கடவுளர் சான்ற செய்வினை மருங்கிற் - சென்றோர் வலவரின் ஒடுவை” என்றது இராப்பொழுது அகலாது நீட்டித்ததற்கு ஆற்றாளாய்க் கூறினாளென்று உணர்க. (சஎ} ஆய்வுரை : இஃது ஒதற்பிரிவுக்குரிய காலவரையறை கூறு கின்றது. .

( இ-ள்) இன்றியமையாது வேண்டற்பாலதாகிய சிறப்

1. கல்வி வேண்டிய யாண்டு இறவாது, மூன்று, இறவாது என இந்நூற் பாவை இரு தொடராகப் பிரித்து, "துறவறத்தினைக் கூறும்வேதாந்த முதலிய கல்வி வேண்டிய யாண்டைக் கடவாது’ எனவும் 'அக்கல்வியெல்லாம் (தத்-துவம் -அசி என்னும்) மூன்று பதத்தைக் கடவாது' எனவும் பொருள் கூறுவர் கச்சினார்க் கினியர். "துறவறத்தினைக் கூறும் வேதாந்த முதலிய கல்வி வேண்டிய யாண்டைக் கடவாது’ எனக்கடறின், அக்கல்வி விரும்பிய (ஓர்) யாண் டாகிய) எல்லைக்குள் அடக்கும் என்பதன்றி கச்சினார்க்கினியர் கூறுமாறு: ஒதற்பிரிவுக்குக் காலவரையறையில்லை’ என்பது அத்தொடரால் தெளிவாகப் புலப்படாமையாலும், தலைவன் கற்பியல் வாழ்ககையில் மேற்கொள்ளும் பிரிவு கட்குரிய காலவரையறை கூறும் அதிகாரத்துட்பட்ட இச்சூத்திரத்தில் வரும் மூன்று என்னும் தொகை, யாண்டு மூன்று எனத் தான் சார்ந்துள்ள யாண்டின் தொகை யினைக் குறித்ததன்றி, வட நூலிற் கூறப்படும் தத் (அது), துவம் (கீ), அசி (ஆகின் றாய்) என்னும் மகாவாக்கியத்திலுள்ள பதங்கள் மூன்றினையும் குறித்ததென்றற்கு யாதொரு தொடர்பும் இன்மையானும் இவ்வுரை இக்நூற்பாவுக்கு கச்சினார்க்கினி யர் வலிக்தெழுதியவுரையாவதன்றி இந் நூற்பாவுக்குரிய உண்மைப் பொருளைப் புலப் படுத்துவதன்றென வுணர்க.