பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్లూ - தொல்காப்பியம் - பொருளதிகாரம்

புணர்ச்சிக்கண் மெய்யுறு புணர்ச்சியையும் உள்ளப்புணர்ச்சியென்று கூறி அதன் வழிக் கற்பு நிகழ்ந்ததென்றுங் கூறவும்படும். இவ் வாசிரியர் ஆதி ஊழியின் அந்தத்தே இந் நூல் செய்தலின் முதனுன் லாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்தபின்னர்க் கற்பு நிகழுமா றுங் கூறித் தாம் நூல் செய்கின்ற காலத்துப் பொய்யும் வழுவும் பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறுங் கூறினார்: அக் களவில் வழி நிகழ்ந்த கற்புங் கோடற்கென்று உணர்க.

மைப்பறப் புழுக்கின் நெய்க்கணி வெண்சோறு வரையா வண்மையோடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி யங்கண் இருவிகம்பு விளங்கத் திங்கட் சகட மண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணுமிமையார் நோக்குபு மறைவ மென் பூ வாகைப் புன்புறக் கவட்டிலை பழங்கன்று கறித்த பயம்பம லறுகைத் தழங்கு குரல் வானின் தலைப்பெயற் கின்ற மண்ணு மணியன்ன மாயிதழ்ப் பாவைத் தண்ணறு முகையொடு வெண்ணுால் சூட்டித் துவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழைபட் டன்ன மணன்மலி பந்தர் இழையணி சிறப்பிற் பெயர் வியர்ப் பாற்றித் தமர்நமக் கீத்த தலைநாள் இரவின்

1. ஆதியூழியின் அக்தம் என்றது, 'தலைச் சங்க காலத்துத் தென்பாலி முகத்திற்கு வடவெலலையாகிய பஃறுளியென்னும்யற்றிற்கும் குமரியென்னும் யாற் றிற்கும் இடையே எழுநூற்றுக்காவதம் பரவியிருந்த நாற்பத்தொன்பது காடுகளும் குமரிகொல்லம் முதலிய பன்மலைகாடும் காடும் கதியும் பதியும் தடர்ேக்குமரி வட பெருங்கோட்டின்காறும் கடல்கொண்டொழிந்த ஊழியிறுதியாகிய காலப்பகுதி பினை. தலைச் சங்கத்து இறுதியிலும் இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் தொல்காப்பியனார் என்பது, இறையனார் களவியலுரையாலும் தொல்காப்பியம் பேராசிரியர் உரையாலும் சிலப்பதிகாரம் அடியார்க்கு கல்லார் உரையாலும் கன்கு

தெளியப்படும்.

இருடிகள் - முனிவர்கள்