பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ற்பியல் - நூற்பா சி ୫:ଣ୍ଡf:

உவர் நீங்கு கற்பினெம் உயிருடம் படுவி முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப் பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியல் உறுவளி யாற்றச் சிறுவரை திறவென ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் உறைகழி வாளின் உருவுபெயர்ந் திமைப்ப மறைதிறன் அறியா ளாகி ஒய்யென நாணினள் இறைஞ்சி யோளே பேணிப் பரூஉப்பகை யாம்பற் குரூஉத்தொடை நீவிச் சுரும்பிமர் ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருண்மறை யொளித்தே (அகம்.135).

என வரும், )اموي(

ஆய்வுரை: இது, கரணத் தோற்றத்திற்குரிய காரணம் கூறு கின்றது. (இ-ள்) ஒருவன் ஒருத்தியை அன்பினாற் கூடியொழுகிப் பின் அவளை அறியேன்” எனப் பொய் கூறுதலும், நின்னைப்பிரி யேன்” எனத் தெய்வத்தின் முன்னிலையில் உறுதி கூறிப் பின்னர் அவ்வுறுதியின் வழுவி நடத்தலும் ஆகிய தீய வழக்கங்கள் தாட்டில் தோன்றிய பின்னரே சான்றோராகிய தலைவர்கள் காதலர் இருவரும் கணவனும் மனைவியுமாகப் பிரிவின்றி வாழ் தற்கு இன்றியமையாத திருமணச் சடங்காகிய கிரணத்தினை வகுத்தமைத்தனர் என்று.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் கரணம் யாத் தனர். எனவே, அவை தோன்றாத காலம் மிக முந்தியதென்பதும், அத் தொன்மைக் காலத்தில் இத்தகைய திருமண நியதியாகிய கரணத்திற்கு இன்றியமையாமை நேர்ந்ததில்லையென்பதும், ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ எனத்தொல்காப்பியனார் தம் முன் னோர் கூற்றாக வைத்துரைத்தலால் இத்தகைய கரணமாகிய நியதி ஆசிரியர் தொல்காப்பியன்ார் காலத்திற்கு முன்னரே

1. கரணமெடு புணர்ந்த வதுவைக்கு மேற்கோளாக ச்சினார்க்கினியர் அடுத்துக்காட்டிய அககானுாறு 136.ஆம் பாடலில் வடமொழியாளர்க்குரிய வேள் விச் சடங்கு எதுவும் இடம் பெறாமையால், தொல்காப்பியனாரால் கரணம் எனத் குறிக்கப்படும் திருமணச் சடங்கு, வடமொழியில் தருமசாத்திரத்திற் கூறப்படும் வருண முறைப்படியமைந்த வேள்விச்சடங்கன்றென்பது கன்கு வலியுறுதல் காண்க,