பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ώ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

விருந்தொடு நல்லவை வேண்டற் கண்னும் மாலை யேந்திய பெண்டிரும் மக்களுங் கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும் ஏனைய வாயிலோ ரெதிரொடு தொகைஇப்’ பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்றும் எண்னருஞ் சிறப்பிற் கிழவோன் மேன.

இது தலைவற்கு உரிய கிளவியெல்லாந் தொகுத்துணர்த்துதல் துதலிற்று.

இளம்பூரணம்:

(இ.ள். கரணத்தினமைந்து முடிந்த பின்பு, நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சி முதலாக ஏனைய வாயிலோரெதிரொடு கூடிப் பண்ணுத லமைந்த பகுதியினையுடைய முப்பத்தின்மூன்றிடத்தி னும் கூறல் எண்ணுதற்கரிய சிறப்பினையுடைய கிழவோன் மேலன

என்றவாறு.

இடம் என்பது வகையிற் கூறியவதனால் உரைக்கப்பட்டது. கற்றென்பது வருகின்ற சூத்திரத்தினும் கொணர்ந்துரைக்கப் பட்டது."

கரணத்தி னமைந்து முடிந்த காலை என்பது - ஆசான்? புணர்த்த கரணத்தினால் வதுவை முடிந்தபின் என்றவாறு.

நெஞ்சு தளையவிழ்த லாவது-தலைவியைத் தலைவன் கண் லுற்றஞான்று தலைவன் மாட்டு உளதாகிய பெருமையும் உரனும் தலைவிமாட்டு உளதாகிய அச்சமும் நானும் மடனும் ஏதுவாக இயற்கைப்புணர்ச்சி இடையீடுபட்டுழி வேட்கை தணியாது வரைத்

(பா.வே) ஏனை வாயில் எதிரொடு தொகை இயப்

1. வகையிற் கூறுதலாவது, தனித்துறைகளாக விரித்துக்கூறாமல் ಘ್ನ: 6 # வகைகள் தோன்றுதற்குரிய இடங்கனாக முப்பத்து மூன்றிடங்களை வகுத்துக் க. துதல்.

2. கிழவோன்மேன' எனப் பொதுப்படக் கூறப்படினும் கடற்று என்பது, அடுத்துவரும் நூற்பாவில் 'கிழவோள் செப்பல்” (கற்பியல் -சா) என்பத

னாற் கொணர்க் துரைக்கப் பட்டது என்பதாம்.

3. ஆசான்-வதுவைச் சடங்கினை நிகழ்த்தும், ஆசிரியன்,