பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笠。登。 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

என்னுறு விழுமம் நோக்கிப் பொன்னொடு திருமணி இமைக்குங் கோடுயர் நனந்தலை இரவுடைப் பெண்டி ரிடும்பை நோக்கித் தெளிவுமனங் கொண்ட தீதறு காட்சி வெளியன் வேண்மான் விளங்குகரி போல மலிகடல் உடுத்த மனங்கெழு நனந்தலைப் பலபா ராட்டவும் படுவ மாதோ கடைந்து கவித்தன்ன் கால்விங்கு கருங்கட் புடைதிரள் வனமுலை புலம்பல் அஞ்சிக் காமர் நுழைநுண் துசுப்பின் தாமரை முகத்தியைத் தந்த பாலே. (குணநாற்பது)

எனவரும்.

அஞ்சவந்த உரிமைக்கண்ணும்' என்றது - தலைவன் தானும் பிறரும் அஞ்சும்படியாகத் தலைவிமாட்டு உளதாகிய கற்பாகிய உரிமைக்கண்ணும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

நன்னெறிப்படரும் தொன்னலப் பொருளினும் என்றதுநன்னெறிக்கட் செல்லா நின்ற தொன்னலப் பொருண்மைக் கண்ணும்’ என்றவாறு.

நன்னெறியாவது அறம்பொருளின்பம் வழுவாத நெறி. தலைமகன் சிறப்புத் தொன்றுதொட்டு வருதலிற் குடிநலத்தைத் தொன்னலமென்றார். இதனாற் சொல்லியது அறம் பொருள் இன்பங்களை வழாமல் தன் குலத்திற்கேற்ற மனைவாழ்க்கையைத் தலைமகள் நடத்துதற்கண்ணும் தலைவன்கண் கூற்று நிகழும் என்றவாறு.

1. அஞ்ச வக்த உரிமையாவது, தலைமகள் அருளிக்கூறினும் வெகுண்டு கடறினும் அவ்வப்பயன்கள் உடனே விளையும் நிலையுணர்ந்து அயலார் அஞ்சி யோழுகுமாறு தலைவி மர்ட்டுளதாகிய நெஞ்சத்திண்மையாகிய மனை வாழ்க்கை :புரிமை.

2. தொன்னலம் என்றது, தொன்று தொட்டு உளதாய்த் தொடர்ந்து கிலை பேத்துவரும் தலைவனது குடிப்பிறப்பின் கலத்திணை.