பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா டு 2.A.

தடமருப் பெருமை ...காண்டும்மே -நற்றிணை (ளஉல்)

இதனுள் ஊடற்குறிப்பின ளாகிய தலைவி மனைவாழ்க்கைத் தரும மாகிய விருந்து புறந்தருதல் விருப்பினளாதலின் நன்னெறிப் படர்தல் ஆயிற்று.

பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக் குற்றஞ் சான்ற பொருள் எடுத்துரைப்பினும் என்ற து-வரைந்து பெற்றவழித் தலைவியைப் பெருமையின் கண்ணே நிறுத்திக் களவுக் காலத்துக் குற்றஞ்சான்ற பொருளை யெடுத்துக் கூறியவழியும் என்றவாறு.

அதிரிசை வருவிய பெருவரைத் தொடுத்த பஃறேன் இறாஅல் அல்குநர்க் குதவு நுந்தை நன்னாட்டு வெந்திறல் முருகென நின்னோய்க் கியற்றிய வெறிநின் தோழி என்வயி னோக்கலிற் போலும் பன்னாள் வருந்திய வருத்தந் தீரநின் திருந்திழைப் பனைத்தோள் புணர்ந்துவந் ததுவே.

இதனுள் நுந்தை நன்னாட்டு என்றதனால் தலைவி பெருமை பும், நின்னோய்க்கியற்றிய வெறி நின்தோழி யென்வயி னோக்க லிற் போலும்’ என்றதனால் குற்றஞ்சான்ற பொருள் என்பதும் அறிந்து கொள்க.

நாமக் காலத் துண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் என்பது - அச்சக்காலத்து நமக்குத் துணையாயிற் றெனத் தோழி ஏமுறுகடவுளை ஏத்து தற்கண்ணும் தலைவன் கட் கூற்று நிகழும் என்றவாறு.

1. காமக் காலம்-தலைவன் வரும் வழியின் இடையூறுகளை யெண்ணித் தோழியும் தலைவியும் தலைவனுக்கு என்னகேருமே என அஞ்சுதற்குரிய கள

வுக்காலம்,

உண்டு என-கமக்குத் துணையாய் கின்ற தொரு தெய்வம் உண்டு னைத் தெளிந்து.

ஏம் உது கடவுள்-தன்னை கினைந்தார்க்குப் பாதுகாவலை உறும்படி தோன்றாத் துணையாய் கின்று உதவும் கடவுள் காமம்-அச்சம்: காம் என்னும் உரிச்சொல் அம்முப்பெற்று காமம் என்றாகியது, ஏம்-பாதுகாவல்; ஏமம் ஏம்

எனக்குறைந்து கின்றது. ஏமம்-பாதுகாப்பு.