பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్ర ప్త5 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

உதாரணம் வந்தவழிக் காண்க.

அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும் என்பது - தலைவி தன் துன்பந்தீர ஆர்வத்தொடு பொருந்தச் சொல்லப்பட்ட பொருண்மைக்கண்ணும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. என்றது, களவுக்காலத்து வருந்திய வருத்தந்தீரத் தனது காதல் மிகுதி தோன்றச் சொல்லுதற் பொருளின் கண்ணும் என்றவாறு.

யாயும் ஞாயும் யாரா கியரோ ...கலந்தனவே (குறுந். சல்) எனவரும்,

சொல்லென ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந் தொடுத்தற்கண்ணும் என்பது - யாதானும் ஒன்றை நுகரினும் நீ கையால் தொட்டது. வானோர் அமிழ்தம் புரையும், இதற்குக் காரணம் சொல்லுவாயாக என்று அடிசில் தொடுதற்கண்ணும் பூத்தொடுத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், சாந்து முதலிய னவும் கொள்க. உதாரணம் வந்த வழிக்காண்க.

வேம்பின் பைங்காயென் தோழி தரினே தேம்பூங் கட்டி (குறுந், கசக்சு) எனத் தலைவன் கூறினமை தோழி கூறுதலானும் அறிக.

அந்தணர் திறத்தும் சான்றோர்.தேனத்தும் அந்தமில் சிறப் பிற் பிறர் பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் என்பது - பார்ப்பார்கண்ணும் சான்றோர்கண்ணும் மிக்க சிறப்பினையுடைய பிறர்ாகிய அவரவரிடத்தும் ஒழுகும் ஒழுக் கத்தைக் குறிப்பினால் காட்டிய இடத்தினும் என்றவாறு.

உதாரணம் வந்த வழிக் கண்டுகொள்க.

1. அல்லல் தீர ஆர்வமோடு அளை இச் சொல்லுறுபொருளாவது, களவுக் காலத்துத் தான் "உற்ற துன்பமெல்லாம் நீங்கத் தலைமகன் பால், அன்பீனும்

ஆர்வத்துடன் கலந்து தலைமகள்கூறும் இன் சொற்பொருண்மை.