பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ද්‍රි.

தி

கற்பியல் - நூற்பா டு

ஒழுக்கத்துக் களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமர லுள்ளமோ டளவியவிடத்தும் என்பது - ஒழுக்கத்தி ஆங் களவுக்காலத்துநிகழ்ந்த அருமையைத் தனித்துச் சுழன்ற உள்ள த்தோடே உசாவிய விடத்தும்’ என்றவாறு .

உதாரணம் வந்தவழிக் காண்க,

அந்தரத் தெழுதிய வெழுத்தின் மாண வந்த குற்றம் வழி கேட ஒழுகலும் என்பது- களவுக்காலத்தொழுகிய ஒழுக்கக் குறைபாட்டான் நிகழ்ந்த குற்றத்தை ஆகாயத்தெழுத்துப்போல வழிகெட ஒழுகுதற்கண்ணும் என்றவாறு."

உதாரணம் வந்த வழிக் காண்க.

அழியல் அஞ்சலென் றாயிரு பொருளினுந் தானவட் பிழைத்த பருவத்தானும் என்பது - அழியல், அஞ்சல் என

1. ஒழுக்கத்துக்களவினுள் என்பதனைக் களவொழுக்கத்தினுள் என விகுதி பிரித்துக்கூட்டுக.

2. களவினுள் நிகழ்ந்த அருமையை உள்ளமொடு அளவிடி அலமரல்

இடத்தும் என இயைத் துப் பொருள் கொள்க.

புலம்பு-தனிமை, அலமரல்-சுழற்சி. இதுகாறும் தானுற்ற துன்பங்கட்கு உசாத்துணை பெறாது தனித்துச் சுழன்ற உள்ளம் என் பார், புலம்பி அலமரல் உள்ளம் என அடைபுணர்த்தோதினார். அளவுதல்-இருவருள்ள முங் கலந்து ஒன்றும் கிலையில் கலந்து உரையாடல்.

3. உருவுடைய ர்ேமேல் எழுதும் எழுத்து எழுதும் அவ்வளவிலாவது வடிவு பெற்றுத் தோன்றுதல் உண்டு. அருவாகிய ஆகாயத்தில் எழுதப்படும் எழுத்து எழுதப்படும் அங்கிலையிற்கூடி வடிவுபெறாது அழிக்தொழியும் என்பார், "அக்தரத்து எழுதிய எழுத்தின்மான' என்றார். அந்தரம்-ஆகாயம். மாண-ஒப்ப; உவமவுருபு. ஆகாயத்தில் எழுதப்படும் எழுத்து வடிவுபெறா தொழிவதுடன் அதற்கிடம்ாகிய ஆகாயமும் புலனாகாது மறைதல்போல, களவுக்காலத்தில் தம்மி டையே நேர்ந்த குற்றங்கள் உருவற மறக்கப்படுவதோடு அவை கிகழ்தற்கு வழி பாகிய சூழ்நிலைகளும் மறக்கப்பட்டுக்கெடுமாறு காதலர் இருவரும் அன்புமீ தூர ஒழுகுதல் என்பார், "அந்தரத்து எழுதிய எழுத்தின்மாண வந்த குற்றம் வழிகெட

స్త్రమే என்றார். -

4. அழியல், அஞ்சல் என் புழி, அல் வியங்கோள்விகுதி, எதிர்மறைக்கண் வக்தது,