பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@_臀 தொல்காப்பியம் - பொருளதிகார ,

இயற்கைப்புணர்ச்சிக்கட் கூறிய அவ்விருபொருளைப் பிழைத்த காலத்தினும் தலைவன் கண் கூற்று நிகழும் என்றவாறு.

அஃதாவது, புறப்பெண்டிர் மாட்டுப் பிரிதல். "நகுகம் வாராய் .........நின்றதுவே (நற்றிணை உருய) எனவரும்.

நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப் பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னினாகிய தகுதிக்கண்ணும் என்பது-பொறைமையும் பெருமையும் மெய்யெனக் கொள்ளு மாறு அருளி ஆராய்தல் அமைந்த வாயிலொடு பொருந்தித் தலைவன் தன்னான் ஆகிய தகுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு .

அருளிப் பொருந்திக் கூறும் எனக் கூட்டுக. எனவே தலைமகன் என்பது உந் தலைமகள் என்பது உம் எஞ்சிநின்றன. கூற்று என்றது அதிகாரத்தான் வந்தது. அஃதாவது, பொறுத்தல் வேண்டும் என வும் சிறுமை செய்தல் குற்றம் எனவும் கூறுதலும், தலைமகள் தன்னால் வந்ததனை என்னால் வந்தது எனவும் இவ்வாறு கூறுதல். பன்னல் சான்ற வாயிலாவது, நீ என் செய்தனை? இவள் வெகுடற் குக் காரணம் என்னை? என ஆராய்தலிற் பொருந்திய தோழி என்க பொருந்துதலாவது வேறுபடாது உடம்படுதல்.

அவை வருமாறு: (திருக்குறள் 1314, 13 18, 13 15, 13:19, 13 13) எனவரும். பிறவும் அன்ன.

புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியுஞ் செய் பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும்’ என்பது - புதல்வனைப்

1. புனிறுதீர் பொழுது-புதல்வனைப் பெற்ற தலைவி ன் றணிமை நீங்கி உடல் தூய்மை பெறுதற்குரிய காலம், புனிறு--ஈன்றணிமை.

கெய்பணி மயக்கம் புரிக்தோள்-கெய்யணிதலாகிய கலப்பினைப் பெற: :ராடி வாலாமை நீங்கி உடல் தூய்மை பெற்ற தலைவி. லாலாமை-மகiன்று கீரா டாமையாலுளதாகி தூய்தன்மை: தீட்டு.

ஐயர்-முனிவர். விண்செலல்மரபின் ஐயர்க்கேந்திய தொருகை எனத் திரு முருகாற்றுப்படையில் ஐயர் என்னும் சொல் வியக்கத்தக்க முனிவர்களைக்குறித்து வழங்கியுள்ளமை இங்கு ஒப்புகோக்கத்தகுவதாகும். அமரர்-தேவர்.