பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா டு 3翌。なr

பயந்த ஈன்றணிமை நீங்கின பொழுதின் கண் நெய்யணிமயக்கம் புரிந்தவளைக் குறித்து முனிவர்மாட்டும் அமரரைக் குறித்தும் செய்யா நிற்கும் பெரிய சிறப்பொடு சேர்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

நெய்யணி மயக்கமாவது வாலாமை நீங்கி நெய்யணிதல். நோக்கிச் சேர்தல் எனக் கூட்டுக.

  • வாராய்பான நகு கம்...... புதைத்ததுவே (நற்றிணை-எஸ்) என வரும்.

பயங்கெழு துணையணைப் புல்லிப்புல்லாது உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி அல்கல் முன்னிய நிறையழி பொழு தின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் என்பது-தலைவன் பரத்தையிற் பிரிந்துழி ஊடற் கருத்தினளாய்ப் பயங்கெழுதுணை அணையைப் புல்லிப் புல்லாது வருந்திக் கிடந்த தலைவியைக் கிட்டித் தங்குதலைக் குறித்த நிறையழிபொழுதில் தலைவியது மெல்லென்ற சீறடியைப் புல்லிய இரத்தற்கண்ணும் (தலைவன் கூற்று நிகழும்) என்றவாறு.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று (குறள், கா.0ள}

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா (குறள்.கா.உ.சு)

ஊடலில் தோன்றுஞ் சிறுதுணி நல்லளி வாடினும் பாடு பெறும் (குறள் கக.உ.உ) என வரும்,

l-l.-------l.ൺ-ബ്

1. அல்கல் முன்னிய பொழுது - (தலைவன் தலைவியுடன் நெருங்கித்) தங்குதலைக் கருதிய காலம்; இங்கனம் தலைவன் தலைவியுடன் தங்குதல் வேண் டும் எனக்கருதுதற்குத் தலைவியைத் தான் நீண்டநாட்கள் மெய்யுறாமையை எண்ணி ஆற்றல் கிலைமைக்கண் தோன்றிய அவனது நிறையழிவே காரணம் என்பார், 'அல்கல் முன்னிய கிறையழிபொழுது என்றார். அல்கல்-தங்குதல், முன்லுதல்

கருதுதல்.