பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா டு

.7%. கு

என்றது பொருள்களை உண்மையாத உணர்ந்த இன்பத்தை அறியுந்தோறும் அவற்றை முன்னர் இவ்வாறு விளங்க உணராத அறிவின்மையை வேறுபடுத்துக் கண்டாற்போலுஞ் சேயிழை மாட்டுச் செறியுந்தொறுந் தலைத் தலை சிறப்பப் பெறுகின்ற காமத்தை முன்னர் அறியப்பெற்றிலேமென்று வேறுபடுத்த லென்றவாறு :

அஞ்ச வந்த உரிமைக்கண்ணும் தலைவனும் பிறரும் அஞ் சும்படி தலைவிக்கட் டோன்றிய உரிமைகளிடத்தும்:

அவை இல்லறம் நிகழ்த்துமாறு தன் மனத்தாற் பலவகை யாகக் காணலும் பிறர்க்குத் தான் கொடுத்தலுங் கற்புச் சிறத் தலு மாம்.

உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்.க ணொண்பொருள்-தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வான் அனைத்துரோ நானுடையாள் பெற்ற நலம். (நாலடி. 38. 6)

இதனுள் நலமென்றது. இம்மூன்றினையும். தலைவி இல்லறப் பகுதியை நிகழ்த்துமாறு பலவகையாகக் காணும் தன்மை உணர்வுடையோன் ஒதிய நூல் விரியுமாறுபோல விரியா நின்ற தெனவும், இவள் கோடைநலம் வள்ளன்மை பூண்டான் பொரு ளனைத்தெனவும், இவளது கற்புச்சிறப்புப் பிறர்க்கு அச்சஞ் செய்தலின் வாளனைத்தெனவுத் தலைவன் அவளுரிமைகளை வியந்து கூறியவாறு காண்க.

நன்னெறிப் படரும் தொல் நலப் பொருளினும் . இல்லறத்

1. அறிதோறறியாமை (1410) என வரும் இத்திருக்குறளுக்கு அமைந்த இவ்வுரை, கச்சினார்க்கினியரால் எழுதப்பெற்று இதுவரை கிடைக்கப்பெறாத திருக்குறளுரையின் சிறப்பினைப் புலப்படுத்துவதாகும்.

2. இங்கு மூன்று என்றது, இல்லறம் நிகழ்த்துமாறு தன்மனத்தாற் பல

வகையாகக் காணல், பிறர்க்குத் தான் கொடுத்தல், கற்புச் சிறத்தல் என மேற் குறித்த மூவகை கலங்களையும். காலடியார் 386 - ஆம் பாடலின் பொருள் கயத்தினை விளக்கும் முறையில் இவ்வுரைப்பகுதியமைந்துளது.