பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荃。笠 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

திற்கு ஒதிய நெறியின்கண் தலைவி கல்லாமற் பாகம் பட ஒழுகுந்

தொன்னலஞ் சான்ற பொருளின் கண்ணும்:

பொருள் வருவாய் இல்லாத காலமும் இல்லற நிகழ்த்துதல் இயல்பாயிருத்தற்குத் தொன்னலமென்றார்.

குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதும் கடல் நீர் அறவுண்ணுங் கேளிர் வரினுங் கடனிர்மை கையறாக் கொள்ளும் மடமொழி 19ாதர் மனைமாட்சி யாள். (நாலடி 38 2)

இஃது ஒரு குடம் நீராற் சோறமைத்து உண்னு மாறு மிடிப்பட்ட காலத்தும் மனைக்கு மாட்சிமையுடையாள் கடல் நீரை வற்ற உணனுங் கேளிர் வரினும் இல்லற நிகழ்த்துதலைக் கைக்கு நெறியாகக் கொள்ளுமெனத் தலைவன் வியந்து கூறினான்.

பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலை இக் குற்றஞ்சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்-தலைவி அங்ங்னம் உரிமை சான்ற இடத்து அவளைப் பெருமையின் கண்ணே நிறுத்திக் குற்றமமைந்த களவொழுக்கத்தை வழுவியமைந்த பொருளாகக் கேளிர்க்காயினும் பிறர்க்காயினும் உரைப்பினும்:

அது களவொழுக்கத்தையுந் தீய ஒரையுள்ளுந் துறவாது ஒழுகிய குற்றத்தையும் உட்கொண்டும் அதனைத் தீதென்னா மற். கூறுதலாம்.

நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறு மேலுறை சோரினும்-மேலாய

வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின்

இல்லான் அமைந்ததே இல். (நாலடி. 38-3)

1. கன்னெறி என்றது, கல்லறங்கள் எல்லாவற்றுக்கும் வழியாக அமைந்த இல்லறத்தினை. "அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை' (49) என்பது திருக்குறள்,

படர்தல் பற்றிப்பணிக்தொழுகுதல்,

'தொன்னலம் என்றது, பிறர் கற்பித்தலின் றியே தலைமகன் பால இயல்பாகத்

தோன்றி நிகழும் மனை புரிமை ஒழுகலாற்றினை .