பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

நின்னோய்க் கியற்றிய வெறிநின் தோழி என்வயின் நோக்கலின் போலும் பன்னாள் வருந்திய வருத்தந் தீரநின் திருந்திழைப் பனைத்தோள் புணர்ந்துவந் ததுவே.

தேன் இறாலை அல்குநர்க்கு உதவும் நாடாதலின் நின் நோய்க்கு இயற்றிய வெறி நுமக்குப் பயன்படாது எமக்குப் பயன் றருமென்றோன் என்வயின் நோக்கலின் என்றது, எனக்குப் பயன் கொடுக்கவேண்டுமென்று பராவுதலிற் றோளைப் புணர்ந்து உவந்தது என்றான்". இது கற்புக்காலத்துப் பரவுக்கடன் கொடுக் கின்ற காலத்துத் தலைவன் கூறியது.

அல்லல் தீர ஆர்வமொடு அளை இச் சொல்லுறு பொருளின் கண்ணும் வரைந்த காலத்து மூன்று நாட் கூட்டமின்மைக்குக் காரண மென்னென்று தலைவி மனத்து நிகழாநின்ற வருத்தத் தீரும்படி மிக்க வேட்கையோடு கூடியிருந்து வேதஞ்சொல்லுத லுற்ற பொருளின்கண்ணும்; தலைவன் விரித்து விளங்கக் கூறும்

அது, முதனாள் தண்கதிர்ச் செல்வற்கும், இடைநாள் கந்தரு வர்க்கும், பின்னாள் அங்கியங் கடவுட்கும் அளித்து, நான்கா நாள் ஆங்கியங் கடவுள் எனக்கு நின்னை அளிப்ப யான் நுகர வேண் டிற்று, அங்ங்ண ம் வேதங் கூறுதலால் எனத் தலைவிக்கு விளங்கக் கூறுதல். உதாரணம் இக்காலத்தின்று. *

சொல்லென ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது வானோர் அமுதம் புரையுமால் மக்கென அடிசிலும் பூவுந்

1. அல்குநர் விருக்தினராய் அக்து தங்குவோர்.

2. தேன் இறாலை அல்குகர்க்கு உதவும் கா. தலின் கின் கோய்க்கு இயந் ia வெறி துமக்குப் பயன்படாது எமக்குப் பயன் தரும் என்றான். என் வயின் கோக்கலின் என்றது, எனக்குப் பயன் கொடுக்க வேண்டுமென்று பசாவுதலிற்

றோளை ப் புனர்க் த . வங் த து என் தான் .' என் றிருத்தல் வேண்டும்.

. من بيتي o: நீ குதத

,ே “அல்லல் தீர ...... சொல்லுறு பொருளின் கண்ணும்' என்பதற்கு வைதிக வதுவை:ச் சடங்கினையுளங்கொண்டு உரை வரைந்த கச்சினார்க்கினியர், தாம் கூறும் பொருட்குத் தமிழில் இலக்கியங் காணாமையின், 'உதாரணம் இக்காலத்து இன்று என்றார். இளம்பூரணம் கூறும் உரைக்கு இலக்கியம் உண்மையின் அதுவே தொல்காப்பியனார் கருத்த்ாதல் நன்கு துணியப்படும்.