பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா டு శ్రీ: శ్రీ

குற்றம் நினக்கு உளதென்று அழியலெனவும் எனக்குளதென்று அஞ்சலெனவுஞ் சொல்லப்படும் அவ்விரு பொருண்மைக்கண்ணும்:

இவை இரண்டாகக்கொள்ளின் முப்பத்தநான்காமாதலின் இருவர் குற்றமுங் குற்றபென ஒன்றாக்கியது. தெய்வத்தினாதலின். ஏதம் பவவாதென்றான்

யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செப் புலப் பெயரீைர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலத் தனவே. குறுத், (க்ர்ே

இது நம்மானன்றி நெஞ்சந் தம்மில் தாங் கலத்தலின் தெய்வத் தான் ஆயிற்றெனத் தெருட்டியது.

தான் அவட் பிழைத்த பருவத்தானும் அங்ங்னந் தெய் வத்தினான் ஆயிற்றேனுங் குற்றமேயன்றோ என உட்கொண்ட அவட்கு யான் காதன் மிகுதியாற் புணர்ச்சி வேண்ட என் குறிப்பிற்கேற்ப ஒழுகினையாகலின் நினக்கோர் குற்றமின்றென்று தான் பிழைத்த பருவமுணர்த்தும் இடத்தும்; கூற்று நிகழும்.'

நகைநீ கேளாய் தோழி தகைபெற நன்னாட் படராத் தொன்னிலை முயக்கமொடு நானிழுக் குற்றமை யறிகுநர் போல நாங்கண் டனையநங் கேள்வர் தாங்கண் டனைய நாமென் றோரே.

இதனுள் நன்னாள் வேண்டுமென்னாது கூடிய கூட்டத்துள் தங்கி நானுச் சுருங்கி வேட்கை பெருகிய நம்மினும் ஆற்றா ராயினார்போல நாங் குறித்துழி வந்தொழுகிய தலைவர் தாங் குறித்தனவே செய்தனமென நமக்குத் தவறின்மை கூறினாரெனத் தோழிக்குத் தலைவி கூறியவழித் தலைவன் பிழைப்புக் கூறியவாறு காண்க.

1. தான் அவட்பிழைத்த பருவத்தானும் என்பதற்குப் புதுப்பொருள் கூறிய

o

கச்சினார்க்கினியர் தம் பொருளுக்கு உதாரணமாகக்காட்டிய நகை ே கேளாய் ,

என்ற பாடல் எந்த நூலில் உள்ளது என இடஞ்சுட்டவில்லை.