பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பாடு சன

எனச் சேய் நின்றென்றதனால் துணித்து நின்றவாறுஞ் சினவ லென்றதனாற் பிரிவு நீட்டித்தவாறும், நின்னானை கடக்கிற்பார் யாரென அஞ்சியவாறுங் கூறியவாறு காண்க.

'பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து

கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி’

'கலி, 95)

என்பதும் அச்சமாதலின் இதன் கண் அடங்கும்,

சென்து கை இகந்து பெயர்ந்து உள்ளிய வழியும், சென்று - தலைவன் ஆற்றானாய்த் துணியைத் தீர்த்தற்கு அவளை அணுகச் சென்று கையிகந்து - அவன் மெய்க்கட் கிடந்த தவறு கண்டு தலைவி ஆற்றாளாய் நீக்கி நிறுத்தலானே : பெயர்த்துஅவன் ஒருவாற்றான் அவளாற்றாமையைச் சிறிது மீட்கையினாலே’ உள்ளிய வழியும் - அவள் கூடக் கருதியவிடத்தும்; தலைவன் கூற்று திகழும்.

இதுவுத் துனிதீர்ப்பதொரு முறைமை கூறிற்று.

முற்கூறிய பாட்டுள்.

அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன் மேல் முதிர்பூண் முலைபொருத ஏதிலான் முச்சி உதிர்துகள் உக்கநின் ஆடை ஒலிப்ப எதிர்வளி நின்றாய்நீ செல்: இனி எல்லாயாந் திதிலேம் என்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்றும் எங்கண் மறுத்தர வில்லாயின் மேதக்க வெந்தை பெயரனை வாங்கொள்வேந் தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லும் ஆபோற் படர்தக நாம் (கலி, 8 1}

எனத் தலைவன் கூறியவாறு காண்க.

காமத்தின் வலியும் . அவள் அது நீத்து நீங்கியவழி முற் கூறியவாறன்றிக் காமஞ் சிறத்தலின் ஆற்றாமைவாயிலாகச் சென்று வலித்துப் புக்கு நெருங்கிக் கூடுமிடத்தும் தலைவன் கூற்று நிகழும்.