பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா டு శ్రీ

உடன்சேறல் செய்கையொடு அன்ன பிறவும் மடம்பட வந்த தோழிக்கண்ணும்: அன்னவும் பிற-நீ களவில் தேற்றிய தெளிவகப்படுத்தலுந் தீராத் தேற்றமும் பொய்யாம்; செய்கை யொடு உடன்சேறல் - அவை. பொய்யாகாதபடி செய்கை களோடே இவளை உடன்கொண்டு செல்க, மடம்பட வந்த தோழிக்கண்ணும் - தன்னறியாமை தோன்றக் கூறிவந்த தோழிக் கண்ணும்: கூற்று நிகழும்.

உடன் கொண்டுபோதன் முறைமையன்றென்று அறியாமற். கூறலின் மடம்பட வென்றார். செய்கைகளாவன: தலைவன் கைபுனை வல்வில்' நாண் ஊர்ந்தவழி இவள் "மையில் வாண்முகம் பசப்பூர்'தலும் அவன் புனைமாண் மரீஇய அம்பு’ தெரிந்தவழி இவள் : இணைநோக் குண்கண்ணிர் நில்லா மையும் பிறவுமாம்.

போஅலஞ்செவி' என்னும் பாலைக்கலியுள்,

'ஒரிரா வைகலுட் டாமரைப் பொய்கையுள்

நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ"

0 S C S C S Y g AA L C S D S 0 g S C C C S S S S S S S L L S S S AAAAA D S K Lg g S L S LSS S S જ છે - ક્ર છ માં શ્વ રૂ 哗 磅 & ** 甲戏 * 明 为 a > 经够 哆

அந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே' (கவி,5}

兹了邸 உடன் கொண்டு சென் மினெனத் தோழி கூறியது கேட்ட தலைவன் இவளை உடன்கொண்டு போதல் எல்லாவாற் நானும் முறைமையன்றென்று தோழிக்குக் கூறுவனவும் நெஞ்சிற்குக் கூறுவனவும் பிறவுங் கொள்க.

1. உடன் சேறல் செய்கையோடு அன்ன பிறவும் மடம் பட வந்த தோழிக் கண்ணும்: எனத் தலைவனுக்குரிய திறங்களை எண்ணுதற்பொருளில் அமைந்த இத் தொடரை, அன்னவும் பிற; செய்கையொடு உடன் சேறல்; மடம்பட வந்த தேரழிக் கண்ணும்' எனச் சொற்களைச் சிதர்த்துப்பொருள் வரைதல் உரை முறையாகாது. தலைவியை உடன்கொண்டுபோதல் முறைமையன்று என்று அறியாமல் இவளை உடன் கொண்டு செல்க எனத் தோழி பிரிக் து செல்லுங் தலைவனை நோக்கிக் கூறுதலால் மடம்பட வக்த தோழி என்றார் என்பது, நச்சினார்க்கினியர் கறும் விளக்கமாகும்.