பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு) தொல்காப்பியம்-பொருளதிகாரம்

(தி

வேட்டச் செந்நாய் கிளைத்துரண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சின்னர் வளையுடைக் கையள் எம்மோ டுணி இய வருகதில் லம்ம தானே யளியளோ வளியளென் னெஞ்சமர்ந் தோளே."

(குறுந் 56)

இது தோழி கேட்பக் கூறியது.

"நாம்நகை யுடையம் நெஞ்சே கடுந்தெறல்

வேனி னிடிய வானுயர் வழிநாள் வறுமை கூறிய மன்னீர்ச் சிறுகுளத் தொடுகுழி மருங்கிற் றுவ்வாக் கலங்கல் கன்றுடை மடப்பிடி கயந்தலை மண்ணிச் சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு செங்கோல் வாலினர் தயங்கத் தீண்டிச் சொறிபுற முரிஞரிய நெறியயன் மராஅத் தல்குறு வரிநிழ லசைஇய நம்மொடு தான்வரு மென்ப தடமென் றோளி யுறுகனை மழவர் உருள்.கீண் டிட்ட ஆறுசென் மாக்கள் சோறுபொதி வெண்குடைக் கணைவிசைக் கடுவளி யெடுத்தலில் துணைசெத்து வெருளேறு பயிரும் ஆங்கண் கருமுக முசுவின் கானத் தானே.” (அகம். 121)

இது நெஞ்சிற்குக் கூறியது.

வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும் அங்ங்னம் வேற்றுநாட்டிற் பிரியுங்காலத்துத் தானுறும் இடும்பையிடத்து: தலைவற்குக் கூற்று நிகழும்.

விழுமமாவன:-பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக் கனவிற் கூறுவனவும், போவேமோ தவிர்வேமோ என வருந்திக் கூறுவனவும், இவள் நலன்திரியுமென்றலும், பிரியுங்கொலென்று ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லி அழுங்குதலும் பிறவுமாம்,