பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா டு . நிக

'நெஞ்ச நடுக்குற' (கலி. 24) என்னும் பாலைக்கலியுள் கனவிற் கூறியவாறு காண்க.

'உண்ணாமையின்..சென்று தரு பொருட்கே.’ (அகம்.123)

இது போவேமோ தவிர்வேமோ என்றது.

'அருவியார்க்கும்...... மாமைக் கவினே. (நற்றிணை, 205)

இஃது இவள் நலனழியுமென்று செலவழுங்கியது.

'தேர்செல அழுங்கத் திருவிற் கோலி ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய யான்றொடங் கினெனா னிற்புறந் தரவே,' (ஐங்குறு. 428)

இஃது ஐயந் தீர்த்தது.

"ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக வெண்ணுதி அவ்வினைக் கம்மா வரிவையும் வருமோ எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே.' (குறுந். 63)

இது தலைவியை வருகின்றாளன்றே எனக் கூறிச் செல வழுங்கியது.

மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும் பிரிந்த தலைவன் இடைச்சுரத்து உருவு வெளிப்பட்டுழியும் மனம் வேறுபட்டுழியும் மீண்டு வருதலை ஆராய்ந்த கூறுபாட்டின் கண்ணும் :

'உழையணந்துண்ட......புலம்புகொள் நோக்கே."

(நற்றிணை, 113)

இஃது உருவு வெளிப்பட்டுக் கூறியது.

""ஒன்று ...... நீ துணிந்ததுவே". (நற்றிணை 103) இது வேறுபட்டு மீட்டுவரவு ஆய்ந்தது.