பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா டு டுங்

அவ்வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும் . பிரிந்தவிடத்துத் தான் பெற்ற பெருக்கம் எய்திய சிறப்பின் கண்ணும்: மன மகிழ்ந்து கூறும் .

சிறப்பாவன: பகைவென்று திறை முதலியன கோடலும் பொருண் முடித்தலுந் துறைபோகிய ஒத்தும் பிறவுமாம்.

உதாரணம் : "கேள்கே டுன்றவுங் கிளைஞ ராரவும்’ (அகம். 93) எனவும், 'தாழிருள் துமிய" (குறுந் 270) என்பதனுட் "செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு’’ எனவும், மனமகிழ்ந்து கூறியவாறு காண்க. "முன்னியது

முடித்தனமாயின்’ என்னும் (169) நற்றிணையுட் பொதுப்படச் சிறப்புக் கூறியவாறு காண்க,

பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும் - அச் சிறப்புக்களை எய்திய தலைவன் பெரிய புகழையுடைத்தாகிய தேரையுடைய பாகரிடத்தும் : கூற்று நிகழ்த்தும் .

அவரது சிறப்பு உணர்த்துதற்குப் பாகரெனப் பன்மையாற் கூறினார்.

'இருந்த வேந்தன் அருந்தொழின் முடித்தெனப்

விருந்தே பெற்றனள் திருந்தின்ழ் யோளே” (அகம். 384)

இதனாற் பாகன் சிறப்புக் கூறியவாறு காண்க.

"மறத்தற் கரிதாற் பாக...

மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே." (நற்றிணை, 42)

இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது.

"ஊர்க பாக வொருவினை கழிஇய' (அகம், 44)

செல்க தேரே நல்வலம் பெறுந’’ (அகம்; 84; 874)

எனவும் வரும்.

  • தயங்கிய களிற்றின்மேல் தகைகாண விடுவதோ

தாள்வளம் பட வென்ற தகைநன்மா மேல்கொண்டு'

(கலி,31)