பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா ரு ருக

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள்' (குறள். 1815)

'தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர்

இந்நீர ராகுதி ரென்று' (குறள். 1819)

'எரிகவர்ந் துண்ட என்றுாழ் நீளிடைச்

சிறிதுகண் படுப்பினுங் காண்குவென் மன்ற நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கில் தேம்பாய் கூந்தன் மா அ யோளே' (ஐங்குறு. 324)

எனவும் வரும். இன்னும் அதனானே ஊடலை விரும்பிக் கூறுவனவுங் கொள்க.

"ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்றுகொ லென்று' (குறள். 1307)

"ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப - - நீடுக மன்னோ விரா' (குறள். 1829)

என வரும். இன்னுங் கற்பியற்கண் தலைவன்கூற்றாய் வேறு படவருஞ் சான்றோர் செய்யுட்களெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க.

ஆய்வுரை : இது, மனைவாழ்க்கையில் தலைவனுக்குரிய கிளவிகள் எல்லாவற்றையும் தொகுத்துக் கூறுகின்றது.

(இ-ள்) மனை வாழ்க்கைக்கு இ ன் றி ய ைம ய ர த கரணத்துடன் திருமணம் நிறைவேறிய காலத்து, அச்சமும் நானும் மடனும் பெருமையும் உரனும் காரணமாகத் தம்முள்ளத்து வேட்கை தோற்றாதவாறு முன்னர்க் கட்டுண்டிருந்த இருவர் நெஞ்சமும் கட்டவிழ்ந்து மலர்ந்து கூடிய வரைந்தெய்துங் கூட்டத். தின் கண்ணும், தன்னுள்ளத்து நீங்காத மகிழ்ச்சி மிக்குத் தோன்றுங் காலத்தினும், அஞ்சும் வண்ணம் தலைமகளிடத்தே உளதாகிய கற்புரிமையாகிய நலத்தின் கண்ணும், இல்லறமாகிய நன்னெறிக் கண்ணே ஒழுகுதற்கு ஏதுவாகிய தொன்மை வாய்ந்த நற்பண்பு களாகிய பொருளின்கண்ணும், தலைமகளை வரைந்து பெற்ற