பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவி தொல்காப்பியம்-பொருளதிகாரம்

விடத்துத் தலைவியை மனைமாட்சியாகிய பெருமையின்கண் நிறுத்திக் களவுக் காலத்துக் குற்றம் பொருந்திய பொருண்மையை எடுத்துக் கூறும் நிலைமையினும், வழியில் நிகழும் பல்வேறு இடையூறுகளையெண் ணி அஞ்சு தற்கே துவாகிய களவுக் காலத்து (தோன்றாத்துணையாய் உதவிய தெய்வம்) உண்டு என்று தோழி தமக்குப் பாதுகாவலாயுள்ள கடவுளை ஏத்திய இடத்தும், (தலைவி தன்) துன்பந்திர ஆர்வத்துடன் கலந்து சொல்லுத லுற்ற பொருளிலும், (தலைவியாற் கிடைக்கப்பெற்ற) யாதாயினும் ஒருணவினை நுகருமிடத்து நின்கையால் அமைக்கப் பெற்ற இது எமக்குத் தேவர் அமிழ்தத்தினை ஒத்து அண்ணிக்கின்றது, அதற் குரிய காரணம் கூறுவாயாக’ என அடிசிலையும் பூவையும் தொடுதற்கண்ணும். அறவோராகிய அந்தணரிடத்தும் சான்றோ ரிடத்தும் கெடாத சிறப்பினையுடைய ஏனையோர் பிறரிடத்தும் இன்னவாறு ஒழுகுதல் வேண்டும் எனத் தலைவிக்குக் குறிப்பி னால் அறிவுறுத்துமிடத்தும், களவொழுக்கத்தினுள் ஒருவரை யொருவர் எளிதிற் கண்டு அளவளாவுதற்கியலாதவாறு நிகழ்ந்த அருமைப்பாட்டினை நினைந்து தனித்துச் சுழன்றவுள்ளத்தோடு கலந்துரையாடுமிடத்தும், களவுக்காலத்துத் தம்பால் நிகழ்ந்த குற்றங்கள் ஆகாயத்தில் எழுதிய எழுத்துப்போன்று அவை நிகழ்ந்த இடமும் தோன்றாது மறக்கப்பட்டுக் கெட்டொழியுமாறு ஒருவர்க் கொருவர் அன்பு மீதுார ஒழுகுதர்கண்ணும், தனது பிரிவாற்றாது வருந்துதலும் தான் வரும் வழியின் இடையூறு நினைந்து அஞ்சு தலும் என அவ்விரு நிலைமைக்கண் தான் தலைவிக்குக் குறித்த வண்ணம் வாராது தப்பியொழுகிய காலத்தும், பொறையும் பெரு மையும் ஒரு வடிவுகொண்டாற்போன்று தண்ன எரியுடையளாய்ப் புகழ் நிரைந்த தோழி முதலிய வாயிலொடுபொருந்தித் தன் போன்ற புதல்வனை யீன்றெடுத்த தலைமகளது தகுதிக் கண்ணும், புதல்வனைப்பெற்று ஈன்றணிமை நீங்கிய பொழுதின் கண் நெய் யாடல் புரிந்த தலைவியை நோக்கி அவளுடைய தமையன்மார் பக்கத்தாராக அவர்களைக் குறித்தும் அமர்புரிந்து தெய்வநிலை பெற்ற தன் குடிமுதல்வராகிய வீரர்களைக்குறித்தும் செய்யப் படும் சிறப்புடைய நிகழ்ச்சியிற் கலந்து கொள்ளுமிடத்தும், புறத் இதாழுக்கம் காரணமாகத் தன்னைக் கூடும் விருப்பின்றிப் பயன் பொருந்திய அணையினைப் புல்லி வருந்திக்கிடந்த தலைவியை ஆது. அவளொடு தங்குதலைக் கருதிய நிறை கடந்த நிலையில் ஆகலவியின்மென்மைபொருந்திய சிறிய அடிகளைப் பற்றிக்கொண்டு