பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா சு கூடு

'மனை நடு வயலை வேழம் சுற்றும்

துறைகேழ் ஊரன் கொடுமை நாணி நல்லன் என்றும் யாமே அல்ல னென்னும் என் தடமென் தோளே (ஐங்குறு. க.க) எனவும்,

வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே

. வாழுநம் என்னுஞ் செருக்கு' (குறள். ககடுஉ} எனவும் வரும்:

இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் என்பது-தலை விக்கு இன்பமும் துன்பமும் ஒருங்கு நிகழும் வழியும் கூற்று திகழும் என்றவாறு.

"இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு” (குறள். ககருஉ) எனவும்,

'குக்கூ என்றது கோழி அதனெதிர்

துட்கென் றற்றென் தூஉ நெஞ்சம்

தோள்தோப் காதலர்ப் பிரிக்கும்

வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே' (குறுந்.கருன) எனவும் வரும். >

கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறிஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையம் என்பதுபுதல்வன் றோன்றிய நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறு மாறு பண்ணிச் செறிவு நீக்கிய இளிவந்த நிலையின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

1. கயந்தலை-மெல்லிய தலையினையுடைய இளங்குழந்தை. மூவிருகயர் தலை’ என்னும் பரிபாடற்றொடர்க்குப் பரிமேலழகர் கூறிய விளக்கம் இங்கு ஒப்பு கோக்கத்தகுவதாகும். காமர்-விருப்பம். களி-செறிவு; *விழாவிற்கலத்தல் என்ற பொருளில் இங்கு ஆளப் பெற்றது.

2. கணியின் நீக்கிய-செறிதலினின்றும் நீக்கிய இளிவருகிலை-தாழ்வுளி தாம் நிலை,