பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இளிவந்த நிலையாவது தன்னை அவமதித்தான் என்னுங்

༡་མན་

குறிப்பு.

'கரும்புநடு பாத்திக் கதிர்த்த ஆம்பல்

சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர புதல்வனை யீன்றவெம் மேனி முயங்கல்மோ தெய்யதின் மார் புசிதைப் பதுவே'

(ஐங்குறு சுரு)

என வரும்.

பு:கன்ற உள்ளயொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு தனிகாட்டி இயன்ற நெஞ்சத் தலைப்பெயர்த் தருக்கி எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்’ என்பது-விருப்பமுடைய உள்ளத்தோடே புதுவோரது நலத்தின்பொருட்டு அகன்ற கிழ வனைத் தனது தனிமை மிகவுங்காட்டி அவன் மாட்டுச் செல்கின்ற நெஞ்சத்தை மீட்டு அருகப்பண்ணி அவன் காதலித்தாளை எதிர் பெய்துகொண்டு புணர்ச்சியை மறுத்த ஈரத்தின் கண்ணும் கூற்று நிகழும். ஈரமாவது முற்றும் மறாமை.

'கடல்கண் டன்ன...........................

ஊர்முழுது நுவலு நிற் காணிய சென்மே” (அகம். 178)

என வரும்,

1. புகத்சி-விருப்பம். புதுவோர்-இளமைப்பருவமாகிய புதுகலமுடைய பரத்தையர். சாயல்-மென்மை; ஈண்டு அவரொடு நுகரும் நுகர்ச்சியாகிய நலத் தினைக் குறித்தது. புலம்பு-தனிமை; தலைவன்பிரியத் தனித்துறைதலால் நேர்ந்த வருத்தம். இயன்றகெஞ்சம்-தலைவன் பால் விரும்பிச் சென்ற நெஞ்சம். தலைப் பெயர்த்தல்-அவனிடத்தினின்றும் மீட்டல். அருக்குதல் அருகும்படி செய்தல்; அஃதாவாது தலைவன்பால் வைத்த வேட்கையைச் சுருங்கச் செய்தல். எதிர் பெய்தலாவது, தன்னாற்குறிக்கப்படுவோரை அவர்தம் உருவுஞ்செயலும் புலனாகும் :டி புனைந்துரை வகையால் முன்னிறுத்திக் காட்டுதல்,

இங்கனம் தலைவி தலைவனை மறுத்துரைத்தற்கு அவன்பால் அவள் கொண் டுள்ள அன்புடைமையே காரணமாம் என்பார் . 'மறுத்த ஈரத்த மருங்கினும் என்றார் ஈரத்து மருங்கு . அன்புடைமைப்பகுதி. ... -