பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா கா ζή ζ?"

தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரையென இரத் தற்கண்ணும்' என்பது-பிறள் மாட்டுத் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனைத் தாழ்ந்து எங்கையர்க்கு உரையென வேண்டிக்கோடற் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு,

அகன்றுறை என்னுங் கலியுள்,

நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல் வழித்

தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ்தொடி இளையவ ரிடைமுலைத் தாதுசோர்ந்து இதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால்

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

  • * * * * * * * * * * * S S S S S S S S S S S S S S C C S C C S C S S S S S C C CS SK DS S

மண்டுநீர் ஆரா மலிகடல் போலுநின் தண்டாப் பரத்தை த லைக்கொள நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றி மற் றியாமெனில் தோலாமோ நின்பொய் மருண்டு’ (கலித். எ.க.)

எனக் கூறுதலால் தான் தாழ்ந்தவாறும் எங்கையர்க்கு உரை

இற்றெனக் கூறியவாறும் காண்க.

நினக்கே அன்றஃ தெமக்குமார் இனிதே நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை வேண்டிய குறிப்பினை ஆகி ஈண்டுநீ யருளாது ஆண்டுறை தல்லே.’ (ஐங்குறு. சக)

இதுவும் அது.

1. தங்கிய ஒழுக்கமாவது, பரத்தையர்பால் தங்கிவந்த தலைவனது புறத் தொழுக்கம். தன் கணவனாற்காதலிக்கப்படும் உணர்வுரிமையும் இளமைப்பருவமும் உடையராதல் பற்றிப் பரத்தையரை எங்கையர் (என் தங்கைமார்) எனக்குறித்தாள் தலைவி.

'அன்பில்லாத பொருட்பெண்டிராகிய பரத்தையரை அன்பிற்சிறந்த மனைக் கிழத்தியர் என மாறுபடக்கொண்டு மயங்கிய ே அவர் பாற்சென்று கின் குறையினைக் கூறுவாயாக’ எனத் தலைவனை வணங்கி அவன்பால் ஒன்றனை இரங்து வேண்டு 53 మే அவனது பரத்தமையொழுக்கத்தின் பொல்லாங்கினை எடுத்துக்கூறி இடித் துரைக்கும் முறையில் அமைவது தலைவியின் கூற்று என்னும் கயந்தோன்ற, "தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரை என இரத்தற் கண்ணும்:

ைன் றனர் தொல்காப்பியனார்.