பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.அ தொல்காப்பியம்-பொருளதிகாரக்

செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் என்பதுதலைவன் போகாத காலத்துப் போவெனக் கூறுதலும் என்றவாறு .

'பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி

நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி

ஆங்கே அவர் வயிற் சென்றி அணிசிதைப்பான்

ஈங்கெம் புதல்வனைத் தந்து’’ (கலித். எக}

என வரும்.

காமக் கிழத்தி தன் மகத் தழிஇ ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும் என்பது-காமக்கிழத்தி தலைவி மகவைத் தழிஇ ஏமுற்ற விளையாட்டின் இறுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

‘நாயுடை முதுநீர்.................................

மகன்தா யாதல் புரைவதாங் கெனவே' (அகம். விசு) என வரும்.

சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி பறம்புரி நெஞ்ச மொடு தன் வரவறியாமை புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும் என்பது-சிறந்த செய்கையினையுடைய அவ்விடத்துத் தலைவன் தோன்றி அறம்புரி நெஞ்சத்தோடே தனது வரவைத் தலைவி யறியாளாக நின்று தலைவியைப் புறஞ்செய்து அவள் மாட்டுள தாகிய ஊடலைப் பெயர்த்தல் வேண்டின இடத்தும் தலைவிமாட்டுக் கூற்று நிகழும் என்றவாறு.

அவ்வழி என்றது-தலைவியுங் காமக்கிழத்தியைப் போலத் தன் மகனைக்கொண்டு விளையாடிய வழியும் என்றவாறு.

மையற விளங்கிய' என்னும் மருதக்கலியுள், 'பெரும விருந்தொடு கைதுாவா வெம்மையும் உள்ளாய்

பெருந்தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்றத் - திருந்துபு நீகற்ற சொற்கள் யாங்கேட்ப மருந்தோவா நெஞ்சிற் கமிழ்தமயின் றற்றாப் பெருந்தகாய் கூறு சில'" - எனவும்,