பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*'s தொல்காப்பியம்-பொருளதிகாரம்

யுடைய புதல்வனை மாயப் பரத்தை குறித்த வழியுங் கூற்று நிகழும் என்றவாறு ,

புதல்வனைப் பரத்தைமை குறித்தலாவது, தலைவன் புறப் பெண்டிர் மாட்டுப் போகியவழி வெகுளுமாறு போலப் புதல்வனை யும் அவரிடைச் சென்றவழி வெகுளல். கண்ணிய நல்லணி யெனவே அவர் கொடுத்த நல்லணி யென்பது பெறுதும். பரத்தைமை உள் ளாதவழி இவள் மாட்டுக் குறிப்பு நிகழாதாம். மாயமென்பது பரத்தைக்குப் பண்பாகி இனஞ் சுட்டாது வந்தது.*

உறுவளி தூக்கும் உயர்சினை மாவின்

யானே தவறுடை யேன்” (கலித். 'சர்

எனவரும்.

தன்வயிற் சிறப்பினும் அவன்வயிற் பிரிப்பினும் இன்னாத் தொல்குள் எடுத்தற்கண்ணும்' என்பது-தன்மாட்டு நின்ற மிகுதியானும் அவன்மாட்டு நின்ற வேறுபாட்டானும் இன்னாத பழைய சூளுறவைத் தலைவி யெடுத்தவழியும் கூற்று நிகழும் என்றவாது.

தலைமகள் மாட்டு மிகுதி யாதோ வெனின்,

1. செஞ்ஞாயிறு என்புழிச் செம்மை என்னும் அடைமொழி ஞாயிற்றின் இயல்பான பண்பினைச் சுட்டுவதாய் கின்று இனஞ்சுட்டாதவாறு போல, "மாயப் பரத்தை என் புழி மாயம் என்னும் அடைமொழி பரத்தையர்க்கெல்லாம் இயல்பாகி 1மைந்த பண்பினை ச் அ ட்டுவதாய் இனஞ்கட்டாது அந்தது என்பதாம்.

காயம்-பொய்ம்மை,

2. தன் வயிற்சிறப்பு என்றது, தலைவி தலைவன் பாற் கொண்டுள்ள அன் பின் மிகுதியினையும், அவன் வயிற்பிரிப்பு’ என்றது, தலைவியைவிட்டுப் பிரிதற்குக் காரணமாகிய தலைவனது அன்புக்குறைபாட்டினையும் குறிப்பன.

இன்னாத் தோல்குள்-தான் சோல்லிய சொல்லினின்றும் வழுவினாரைத் துன்புறுத்தும் இயல்பினதாகத் தெய்வத்தின் முன்னிலையில் கின்னிற் பிரியேன்" எனத் தலைமகளிடத்திற் செய்த சூளுறவாகிய சபதம்.

எடுத்தலாவது, அச்சூளுறவினின்றும் தலைவன் தவறினமையால் தலை டிகனுக்கு என்ன தீங்கு விளையுமோ எனத் தலைவி தன்மனத்துட்கொண்டு சிந்தித்தல்: