பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

கற்பியல் - நூற்பா சு ፴፫

'அடும்பவிழ் அணிமலர் சிதை இ மீன் அருந்து ந்

தடந்தாள் நாரை யிருக்கும் எக்கர்த் தண்ணந் துறைவற் றொடுத்து நன்னலங் கொள்வாம் இடுக்கண் அஞ்சி இரத்தோர் வேண்டக் கொடுத்தவை தான்னக் கூறலின் இன்னா தோநம் மன்னுயிர் இழவே.'

இது பிரித்தல் பற்றி வந்தது.

" நீரார் செறுவில் நெய்தலொடு.

பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும் மாய மகிழ்நன் பரத்தைமை நோவேன் தோழி கடன் நமக் கெனவே.’’ {கலித் 75)

இது பெட்பின் கண் வந்தது.

நகையா கின்றே தோழி... மம்மர் நெஞ்சினன் தொழுது நின்றதுவே.’ (அகம் 55)

இது மேற்கூறியவாற்றா னன்றிப் பிறவாற்றான் வந்தது.

"ஒலிபுனல் ஊரனை ஒருதலை யாக

வலிநமக் காவது வலியென் றொழியப் பந்தர் மாட்டிய பரூஉச்சுடர் விளக்கத்துக்

கந்த முனித்தலைத் தும்பி ஆர்ப்பக் காலை கொட்டிய கவர்தோற் சிறுபறை மாலை யாமத்து மதிதர விடாது பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வனைக் காண்டிலுங் காணான்தன் கடிமனை யானே'

னைவரும்.

வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவதென்ப என்பது-வாயில்கள் மாட்டு வருஉங் கூற்றுவகை புளப்படத் தலைவி கூற்று நிகழும் என்றவாறு.

வாயில்களாவார் ;-பார்ப்பார், பாங்கன், தோழி, செவிலி, பாணன், விறலி, இளையர், விருந்தினர், கூத்தர், அறிவர். கண்டோர்.