பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gj":}r தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இவருள் தோழி வாயிலாதல் மேற்கூறுதலின் ஒழிந்த வாயில் கள் ஈண்டுக் கொள்ளப்படும்.

'அன்னாய் இவனோர் இளமா னாக்கன் தன்னுர் மன்றத் தென்னன் கொல்லோ இரந்துரண் நிரம்பா மேனியொடு - விருந்தி னுாகும் பெருஞ்செம் மலனே.” (குறுந் கூாட}

இது பாணன் வாயிலாக வந்துழிக் கூறியது.

நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ ஒன்று தெளிய நசையின மொழிமோ வெண்கோட் டியானை சோணை படியும் பொன் மலி பாடலி பெறி இயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே." (குறுந் ராடு)

இது வருகின்றான் என்ற உழையர்க்குக் கூறியது.

'ஆடியல் விழவின்... ... ... .

பயனின் நம்மவிவ் வேந்துடை அவையே (நற்றிணை. அ)ை இது பாங்கனைக் குறித்துக் கூறியது.

'நெய்யுங் குய்யும்... * * á ॐ & ४

விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே.'

(நற்றிணை. ந. அல்)

'வாயிலின் வரூஉம் வகை என்றமையான், தன் ஆற்றாமை யும் வாயில்களாக் கொள்ளப்படும் என்பது பெற்றாம்.

"புல்லேன் மகிழ்ந புலத்தலுமிலனே...

கோல்நேர் எல்வளை நெகிழ்த்த நூம்மே. (நற்றினை. .இ}

இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது.

புள்ளிமி ழகல்வயின்’ என்ற மருதக்கலியுள், 'பூங்கட் புதல்வனைப் பொய்பா ராட்டி நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி ஆங்கே அவர்வயின் சென்றி அணிசிதைப்பான் ஈங்கெம் புதல்வனைத் தந்து' (கலித். எ.க)

என்று புதல்வன் வாயிலாகக் கூறியது காண்க. (6)