பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா சு &TöᏘ

நச்சினார்க்கினியம் :

இது, முறையானே தலைவிகூற்று நிகழும் இடங் கூறு கின்றது.

(இ-ள்) அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் ஏற்றற் கண்ணும் நிறுத்தற்கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையிற் றிகியா அன்பின் கண்ணும்; அவன் அறிவு ஆ ற் ற அ றி யு ம் ஆகலின் வேதத்தையுந் தரும நூலையுந் தலைவன் அறிந்த அறிவைத் த ைல வி மிக அறியுமாதலின்; ஏற்றற்கண்ணும் . அந்தணர் முதலிய மூவருந் தத்தமக்குரிய வேள்வி செய்யுங்கால் தம் மனைவியர் பலருள்ளுந் தமக்கு ஒத்தாளை வேள்விக்கண் உரிமை வகையான் ஏனை மகளிரின் உயர்த்தல் செய்யுமிடத்தும்; நிறுத்தற்கண்ணும் தத்தங் குலத் திற்கேற்ப நிறுத்துதலைச் செய்யுமிடத்தும்; உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் - அவர் குலத்திற்கேற்ற உரிமைகளைக் கொடுத்த தலைவனிடத்து பெருமையில் திரியா அன்பின்கண் னும்-தத்தங் குலத்திற்கேற்ற பெருமையினின்றும் நீங்காத அன்பு செய்து ஒழு குதற்கண்ணும் : அறியுமாகலின் அன்புசெய்து ஒழுகு மெனக் கூட்டுக.

என்றது, அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருந் தலைவியராகியவழித் தங்குலத்திற் கொண் டவரே வேள்விக்கு உரியர்; ஏனையோர் வேள்விக்கு உரியரல்ல ரென்பது உம்? அவர்க்குத் தங்குலங்கட்கு ஏற்றவகையின் உரிமை கொடுப்பரென்பது உம் அவர்களும் இது கருமமே செய்தா னென்று அன்பில் திரியாரென்பது உங் கூறியவாறு.

1. ஆற்ற அறிதல் மிகவும் அறிதல். எற்றல் உயர்த்துதல். கிறுத்தல் தத்தமக்குரிய ஒழுக்கத்தில் கின்று ஒழுகும்படி செய்தல்.

2. மனைக்கிழத்தியாகிய தலைவிபொருத்தியின் கூற்றுவகையினை விரித் துரைக்கும் இந்நூற்பாவுக்கு, அந்தணர்க்கு நால்வர், அரசர்க்கு மூவ்ர், வணிகர்க்கு இருவர் என்றமுறையில் வேள்விக்குரியராக, மனைக்கிழத்தியர் பலர் உளர் எனக் கொண்டு கச்சினார்க்கினியர் கூறும் பொருள் தொல்காப்பியனார் கருத்துக்கு ஒத்ததன்று என உணர்தல் வேண்டும் .