பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா சு. 怒了š

கன்று போலும் புதல்வன் பிறத்தலான் உளதாகிய விருப்பத்தை யுடைய நெய்யணிக்கு விரும்பிய தலைவனை நெஞ்சை வருத்தித் தன்னைச் செறிதலினின்று நீக்கிய இளிவந்த நிலைமைக்கண்ணும்;

தன்னை அவமதித்தானென்றது இளிவரு நிலையென்றார்.

கரும் பு:நடு பாத்தியிற் கலித்த ஆம்பல்' (ஐங்குறு. 65) இது, புதல்வற் பயந்தகாலத்துப் பிரிவுபற்றிக் கூறியது.

பு:கன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழ வனை - புதல்வனை விளையாட்டை விரும்பின உள்ளத்தோடே புதுவது புணர்ந்த பரத்தையர் தன் மாட்டு மனநெகிழ்ந்த மென்மையின் பொருட்டு அவர்க்கு அருள்செய்யப் பிரிந்து வந்தோனை ; புலம்பு நன காட்டி - தனது தனிமை மிகவும் அறிவித்து, இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த்து அருக்கி - அவன் மேற் சென்ற நெஞ்சினைச் செல்லாமல் அவனிடத்தினின்றும் மீட்டு அருசப்பண்ணி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கி னும்’ - பிறருள் ஒருத்தியைக் காணாளாயினுங் கண்டாள் போலத் தன்முன்னர்ப் பெய்துகொண்டு வாயின் மறுத்ததனால் தோற்றிய நயனுடைமைக்கண்ணும் :

எனவே, மறுப்பாள்போல் நயத்தாளாயிற்று. கிழவனை மறுத்த வெனக் கூட்டுக.

கடல்கண் டன்ன........... ........ 芝s s 3 → → * ஊர்முமுது துவலு நிற் காணிய சென்மே” (அகம், 178) எனவரும். -

எதிர்பெய்து மறுத்த ஈரமெனவே எதிர் பெய்யாது மறுத்த ஈரமுங் கொள்க.

'கூர்முள் முள்ளி'...................... + x நெஞ்சறை போகிய அறிவி னேற்கே."

(அகம். 26)

1. அருக்கி - அருகப்பண்ணி; சுருங்கச் செய்து.

எதிர் பெய்தல் படர்க்கையிடத்தாரைத் தன் முன்னிலையில் உள்ளார்

போல் வைத்துரைத்தல்.

2. ஈரம் . கயத்தலாகிய அன்பு.