பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா சு அக

சேற்றுநிலை முனை இய... சென்றி பெரும நிற் றகைக்குநர் யாரோ" (அகம், 46)

எனவும் வரும்.

காமக்கிழத்தி தன் மகத் தழிஇ ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும் - மனையறத்திற்கு உரியளாக வரைந்துகொண்ட காமக்கிழத்தி, தலைவி புதல்வன் மனைப்புறத்து விளையாடுகின்ற வனைத் தழுவிக்கொண்டு தான் ஏமுறுதற்குக் காரணமான விளையாட்டின் முடிவின் கண்ணும்:

அவள் எம்மைப் பாதுகாப்பீரோவென வினாயவழி அவனும் அதற்கு உடன்பட்டான்போலக் கூறுவன உளவாதலின் ஏமூறு விளையாட்டு' என்றார். இறுதி யென்றார் விளையாட்டு முடியுந் துணையுந் தான் மறைய நின்று பின்னர்க் கூறுதலின்.

'நாயுடை முதுநீர்க்......

மகன் தாய் ஆதல் புரைவதாங் கெனவே” (அகம், 16)

என வரும்.

(சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி அறம்புரி உள்ள மொடு தன்வரவு அறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும் சிறந்த செய்கை அவ் வழித் தோன்றிகாமக்கிழத்தியது ஏமுறும் விளையாட்டுப்போலாது தலைவி தன் புதல்வனைத் தழிஇ விளையாட்டையுடைய இல்லிடத்தே தலைவன் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன்வரவு அறி யாமைப் புறஞ்செய்து - அவ் விளையாட்டு மகிழ்ச்சியாகிய மனை யறத் தினைக் காண விரும்பிய நெஞ்சோடே தன் வரவினைத் தலைவி அறியாமல் அவள் பின்னே நிற்றலைச்செய்து; பெயர்த்தல் வேண்டு இடத்தானும் - தலைவியது துணியைப் போக்குதல் வேண்டிய இடத்தும்:

"தன்வரவறியாமை" என்ற தற்குத் தன்னைக் கண்டால் தலைவியுழை நின்றார் தனக்குச் செய்யும் ஆசாரங்களையும் அவர் செய்யாமற் கைகவித்துத் தன் வரவு அறியாமை நிற்பனென்று

கொள்க !