பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச தொல்காப்பியம்-பொருளதிகாரம்

அதனை நீக்கிய பரத்தையரைக் குதிரையாகக் கூறித் தான் அதற். குத் தக்கு நின்றவாறுங் காண்க.

கடவுட்பாட்டு ஆங்கோர் பக்கமும்' யானைப்பாட்டுக் 'காவற் பாங்கின் பக்க'முமாம்.

கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதல் எங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின் கண்ணும்: கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி - அங்ஙனம் பகுதியினிங்கிப் பரத்தையர் மாட்டு ஒழுகிக் கொடுமை செய்த ஒழுக்கத்தைத் தலைவி பொறுத்தலை வேண்டி; அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி - தன் அடிமேல் வீழ்ந்து வணங்கிய தலைவனை அதனின் மீது துணிமிக்குக் கழறி, காதல் எங்கையர் காணின் நன்றென . நின்மாட்டுக் காதலையுடைய எங்கையர் காணின் இவை நன்றெனக் கொள்வரெனக் கூறி: மாதர் சான்ற வகையின்கண்ணும் . காதல் அமைந்து மாறிய வேறுபாட்டின் கண்ணும்:

பொறாதாரைக் கொள்ளா ரென்பவாகலிற் கோடல் பொறுத்தலாயிற்று. 'காதலெங்கையர், மாதர் சான்ற என்பன வற்றால் துணிகூறினார். எனவே, யாங்கண்டதனாற் பயனின் றென்றார்.

'நில்லாங்கு நில்' என்னும் பூழ்ப்பாட்டினுள்,"

மெய்யைப்பொய் யென்று மயங்கிய கையொன்

றறிகல்லாய் போறிகாணி;

1. தக.பா.வே.

2. கடவுட்பாட்டு’ என்றது, மருதக்கலி 28ஆம். பாடலை.

3. 'யானைப்பாட்டு' என்றது, மருதக்கலி 32 ஆம் பா.லை.

4. கோடல் . பொறுத்துக்கொள்ளுதல்.

5

நெருங்குதல் . இடித்துரைத்தல.

8. பூழ்ப்பாட்டு என்றது, மருதக்கலி 30-ஆம் பாடலை.