பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா சு அடு

நல்லாய்,

பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி, அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள அளிதது நீ பண்ணிய பூழெல்லாம் இன்னும் விளித்து நின் பாணனொ டாடி அளித்தி விடலைநீ நீத்தலின் நோய்பெரி தேய்க்கும் நடலைப்பட் டெல்லா நின் பூழ்.' (கவி. 95)

இதனுள் 'அருளினி'யென அடிமேல் வீழ்ந்தவாறும் *அருளுகம் யாம் யார்' எனக் காதல் அமைந்தவாறும் " விளித் தளித்தி யென இப் பணிவை நின் பெண்டிர் கொள்வரெனவுங் கூறியவாறுங் காண்க. -

'நினக்கே அன்றஃ தெமக்குமார் இனிதே

நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை வேண்டிய குறிப்பினை யாகி ஈண்டுநீ அருளா தாண்டுறை தல்லே.' (ஐங்குறு. 46)

இதுவும் அது.

தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளிய வழியும் பரத்தையர் கருதி அணிந்த நன்றாகிய அணி களையுடைய புதல்வனை மாயப் பரத்தைமையைக் குறித்த விடத்தும்:

அவருள் துனியாலே வருந்திய பரத்தையர் தம் வருத்தத் தினை உணர்த்தியும் தலைநின்றொழுகும் பரத்தையர் தஞ்சிறப்பு உணர்த்தியும் அணிவரென்றற்குக் 'கண்ணிய' எனறார். பரத் தையர்சேரி சென்று அணியணிந்ததற்கு வெகுண்டு கூறலிற் பொய்யாகிய பரத்தை யென்றார். எனவே தலைவன் பரத்தைமை கருதினாளாயிற்று.

1. இங்குத் தாயர்’ என்றது, தலைவன்பாற் காதலுடைய பரத்தையரை. கண்ணுதல் . கருதி அணிதல். மாயப்பரத்தை-மாயப்பரத்தமை; பொய்ம்மைவாய்ந்த பரத்தமையொழுகலாறு. உள்ளுதல் . கருதுதல். -