பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

  • உறுவளி துரக்கும் உயர்சினை மாவின்...

யானே தவறுடையேன். (கலி 84)

எனவரும்.

தன்வயிற்சிறைப்பினும் - தலைவனில் தான் புதல்வற்குச்

சிறந்தாளாகி அத் தலைவன்ம்ாட்டும் அவன் காதலித்த பரத்தை யர்மாட்டுஞ் செல்லாமற் புதல்வனைத் தன்பாற் சிறை செய்தற் கண்ணும்:

புள்ளிமி ழகல்வயல்” என்னும் மருதக்கலியுள்,

அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பவால் தோய்ந்தாரை அறிகுவென் யானெனக் கமழுநின் சாந்தினாற் குறிகொண்டாள் சாப்குவள் அல்லளோ ;

புல்லலெம் புதல்வனைப் புகலக னின்மார்பிற் பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானால் மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பில் பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ:

கண்டேனம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி வண்டிமிர் வகையினர் வாங்கினன் பரிவானால் நண்ணியார்க், காட்டுவு திதுவெனக் கமழுநின் கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவ வால்வளோ,

எனவாங்கு,

பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்கா யிகவாய் நெடுங்கடை நில்லாதி ஆங்கே அவர்வயின் சென்றி அணிசிதிைப்பான் ஈங்க்ெம் புத்ல்வனைத் தந்து.' (கலி, 9)

இது தலைவனிடத்தினின்றும் புதல்வனைச் சிறைத்தது.

ஞாலம் வறந்தீர' என்னும் மருதக்கலியுள், கலி. 82)

1. சிறைத்தல் - புறம்போகாது காத்தல்.