பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<罗爬架 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

தலைவன் வந்த குற்றம் வழிகெட' ஒழுகிக் களவிற் சூளுற வான் வந்த ஏதம் நீக்கி, இக்காலத்துக் கடவுளரையும் புதல்வனை யுஞ் சூளுறுதலின் 'இன்னாத சூள்' என்றார் அது களவுபோலச் சூளுறுதலின் தொல்குள்’ என்றார்.

ஒருஉக்கொடி யியனல்லார்' என்னும் மருதக்கலியுள்,(சலி 88)

'வேற்றுமை என் கண்ணோ ஒராதி தீதின்மை

தேற்றக்கண் டீயாய் தெளிக்கு;

இனித் தேற்றம் யாம்; தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர் மயங்கி நீயுறும் பொய்ச்சூள் அணங்கா கின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு " ( லி.88 )

எனத் தலைவி எம்மேலே இப் பொய்ச்சூளால் வருங்கேடு வருமென மறுத்தவாறு காண்க.

காமக் கிழத்தியர் நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்: நலம் பாராட்டிய காமக்கிழத்தியர்-தலைவி தன்னிற் சிறந்தாராகத் தன்னான் நலம்பாராட்டப்பட்ட இற் பரத்தையர்; தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்-மேல் தீமையுறுவரென முடித்துக்கூறும் பொருளின் கண்ணும்:

மடவ ளம்மநீ இனிக்கொண் டோளே

தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெருநலந் தருக்கு மென்ப விரிமலர்த் தாதுண் வண்டினும் பலர் நீ ஒதி யொண்ணுதல் பசப்பித் தோரே. (ஐங்குறு 67)

இதனுள் இப்பொழுது கிடையாதது கிடைத்ததாக வரைந்துகொண்ட பரத்தை தன்னொடு இளமைச் செவ்வி ஒவ்வா

1. கலம்பாராட்டிய காமக்கிழத்தியர் தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் என இயைத்து, "தலைவி தன்னிற் சிறந்தாராகத் தன்னால் கலம் பாராட்டப்பட்ட இற்கிழத்தியர், மேல் தீமையுறுவர் என முடித்துக் கூறும் பொரு வரின் கண்ணும்: எனப் பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர்.