பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவியல் - நூற்பா கசு கதி

வருங் கந்தருவமார்க்கம் ஐந்தும் தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே - கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறுதலின் அவை ஐந்தெனப்படும் (எ று). w

எனவே, முதற்கந்தருவம் ஐந்துமேயன்றி அவற்றோடு பொருத்தமுடைய கந்தருவம் இவ்வைந்துமென வேறுபடுத்தினார் இவை அப் பன்னிரண்டனுட் கூறாநின்ற ஐந்தும், முதலொடு புணர்ந்தவென்றே ஒழியாது பின்னும் யாழோர் மேன. வென்றார் இவையுங் கந்தருவமே என்றற்கு. இவையும் ஒருவன் ஒருத்தி யெதிர்நின்று உடம்படுத்த லொப்புமையுடைய, கெடலருஞ் சிறப் பெனவே முதல் கரு உரிப்பொருளானுங் களவென்னுங் கைகோ. ளானும் பாங்கி புணர்த்தலின்மையானும் இலக்கணங் குறைப்பட்ட தேனுஞ், சுட்டி யொருவர்ப் பெயர்கொள்ளப்பட்டுக் கற்பியலாகிய இல்வாழ்க்கையும் பெற்றுவருதற் சிறப்புடைய இவையும். ஐந்நிலம் பெறுதலேயன்றி, யென்றானாம். இது புலநெறியன்றி உலகிய லாகலின், உலகியலாற் பாலைநிலனும் ஆண்டு வாழ்வார்க்கு மன்ற லும் உளதாகலித் பாலையுங் கூறினார். எனவே, ஐம்புலத்து வாழ்வார் மணமுஞ் செய்யுளுட் பாடியக்கால் இழுக்கின் றென்றார்." ※ (15) ஆயவடிரை :

இஃது அன்பினைந்திணைக்குச் சிறந்தன. இவை என்கின்றது. (இ - ள்.) முதல் கரு உரியென்னுந் திணைக் கூறுபாட்டுடன் பொருந்திய யாழோர் நெறியினையொத்த காமக்கூட்டம், வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நானுவரையிறத்தல் என்னும் கெடுதலில்லாத சிறப்பினையுடைய ஐந்து நிலைகள்ையும் தனக்குச் சிறந்த நிலைக்களன்களாகக் கொள்ளும் எ-று. (16) தவல் அருஞ்சிறப்பு-கெடுதலில்லாத் சிறப்பு. அருமை ஈண்டு இன்மை குறித்துநின்றது.

4. "தலைகுஞ் சிறப்பின் ஐக்கிலம் என்பதற்கு முல்லை, குறிஞ்சி முதலாவின என இளம்பூரணன் காலத்தின் ஒரு சாசிரியக் பொருள் கூறிவந்தனர் என்பது. "ஐக்கிலம் என்பதனை முல்லை குறிஞ்சி முதலாயின என்தார் உளரா லெனின்: "முதலொடு புணர்ந்த” 3457ు கிலம் பேதுமாதலால் கிலம் என்பதற்கு வேறு பொருண் உதைத்தல் வேண்டும் என்க' எனவரும் இனம் பூரணர் உரைப்பகுதியாற் புலனாம். ஈண்டு ஐக்கிலம்" என் அது ஐக்து கிலமென்ற பொருளிலன்றி ஐக்து இடம் என்ற பொருளிலேயேயாதலின், கக்த்ருவ கெறியினைவொத்த களவு ஐந்தி.

ணைகலை இடமாகப் பெறும் என்பார் உரையும் ஏற்புடையதேயாகும்.