பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్స్లబ్లీ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

இருவகைக் குறிபிழைப் பாகிய இடத்துங் காணா வகையிற் பொழுதுகனி இகப்பினும் தானகம் புகாஅன் பெயர்த்ல் இன்மையிற் காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் வேளாண் எதிரும் விருப்பின் கண்ணுக் தாளாண் எதிரும் பிரிவி னானும் காணுகெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும் வரைவுடம் படுதலும் ஆங்கதன் புறத்தும் புரைபட வந்த மறுத்தலொடு தொகை இக் கிழவோன் மேன என்மனார் புலவர்.

இளம்பூரணம்

இது தோழியிற் கூடிய தலைமகன் வரைந்தெய்துங்காறும் கூறும் பொருண்மை யுணர்த்துதல் நுதலிற்று.

(இ) - ள்.} இருவகைக் குறிபிழைப்பாகிய இடத்தும் என்பதுபகற்குறியும் இரவிற்குறியும் பிழைப்பாகிய இடத்தும் என்றவாறு. பகற்குறி இரவிற்குறி யென்பது எற்றாற் பெறுது மெனின்.

குறியெனப் படுவ திரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்ற தென்ப’’ (களவியல், 40)

என்பதனாற் கொள்க. அக்குறிக்கண் தலைவி வரவு பிழைத்தவிடத்துத் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. ஐங்குறு-298 : இது, குறிபிழைத்தவழித் தோழிக்குச் சொல்லியது. குறுந் 320 . இது, குறிபிழைத்தவழி உள்ளத்திற்குச் சொல்லியது.

காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும் என்பது-தலை

மகளைக் காணா வகையிற் பொழுது மிகவும் கடப்பினுங் கூற்று நிகழும் என்றவாறு. செய்யுள் :