பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

零」

தோல்காப்பியம் - பொருளதிகாரம்

இக்காந்தண் மென்முகைமேல் வண்டன்ற திம்முகையில் கைக்காந்தண் மெல்விரலாய் காணிதோ-புக்குச் செறிந்ததுபோற் றோன்றுந் தொடுபொறி யாம்பண் டறிந்ததொன் றன்ன துடைத்து.'

புகாஅக் கர்லைப் புக்கு எதிர்ப்ப்ட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும் உண்டிக்காலத்துத் தலைவியில்லத்துத் தலைவன் புக்கெதிர்ப்பட்டவழி நீக்கி நிறுத்தாத விருந்து ஏற்றுக் கொள்ளும் பகுதிக்கண்ணும் :

எனவே, மனையகம் புகுதற்கு ஒவ்வாத மிக்க தலைவன் புகுந்தால் இஃதொன்றுடைத்தெனத் தேராது தாய் அவனை விருந் தேற்று நீக்கி நிறுத்தற் பகுதியுந் தழீஇயினவாறாயிற்று.

புகாக்கால மாதலிற் பகாவிருந்தென்றான் விடியற்காலமாயிற் றலைவன் புகானெனவும், புகாக்காலத்துப் புக்கஞான்றாயின் அவர் விருந்தேற்றுக்கோடல் ஒருதலையென்று புகும் என்றுங் கொள்க. தலைவி காட்சியாசையிற் கலங்கியதற்கேற்பத் தலைவர்க்குங் காட்சி யாசை கூறிற்று. அது,

"சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினா மாடு

மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர்நாள். அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே

உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற் கன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய் உண்ணுநீ ரூட்டிவா வென்ற ளெனயானும் தன்னை அறியாது சென்றேன்மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட் டன்னாய் இவனொருவன் செய்தது.கா ணென்றேனா அன்னை அலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையுந்

1. புகா - உணவு, புகாக் சாலை உண்டிக் காலத்து. பகா விருந்து -

தள்ளத்தகாத விருந்து விதித் ர் . த்தற்கரிய விருந்து எனினும் ខជាណេ