பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் قند (نکه

மேற்கொண்டு வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரியும் நிலை யிலும், களவு அலராகி வெளிப்பட்டு விடுமோ என்னும் அச்சத்தோடு நாணம் தலைவி நெஞ்சினை வருத்துதலால் தலைமகளை விலகி ஒழுகுதற் கண்ணும், தலைவியை மணந்து கொள்ளுதல் வேண்டித் தோழி கூறிய குற்றந்தீர்ந்த சொல்லினையேற்றுப் பொருந்திய எதிர்ப் பாட்டின் கண்ணும், தோழி கூறிய சொற்கேட்டு வரைவுடம் படுதற் கண்ணும், அங்கு அவ்வரைவு புறத்ததாயவழிக் குற்றம்பட நேர்ந்த தமர் வரைவு மறுத்தலொடுகூட இங்குக் கூறப்பட்டனவெல்லாம் தலைமகன் மேலன என்பர் ஆசிரியர் எ-று.

இந்நூற்பாவில் தான் அகம்புகான்’ என்புழித் தான் தலைவனையாகலானும் தானுநெஞ்சலைப்ப விடுத்தல்' என்புழி விடுத்தல் தொழிலாகலானும் வரைதல் வேண்டித் தோழி செப்புதல் தலைவனை நோக்கியாகலானும் கிழவோன் மேன' என இளம்பூரணர் கொண்ட பாடமே தொல்காப்பியனார் க ரு த் து க் கு ஏற்புடையதென்பதும், கிழவோள் மேன' என நச்சினார்க்கினியர் கொண்ட பாடம் அத் துணைப் பொருத்தமுடையதன்றென்பதும் நன்கு புலனாகும்.

கிழவோன் கூற்று’ என்னாது கிழவோன் மேன’ எனப் பொதுப்படக் கூறினமையின் இவ்விடங்களில் தலைவனது உள்ள நிகழ்ச்சியும் கூற்றும் உடன்கொள்ளப்படும்.

இ.அ. காமத் திணையிற் கண்கின்று வருஉம் நானும் மடனும் பெண்மைய ஆகலின் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயின் ஆன. இள்ம்பூரணம்

என்பது மேல் தலைவற் குரிய கிளவி கூறி, இனித் தலைவிக்குரிய கிளவி கூறுகின்றாராகலின் முற்பட அவள் தலைவனைக் கண்ணுற்றவழி வரும் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

தலைவியிடத்து நிலைமைபெற்று வருகின்ற நாணமும் மடனும் பெண்மைக்கு அங்கமாகலின், காமவொழுக்கத்தின்கண் குறிப்பினானும் இடத்தினானுமல்லது வேட்கை புலப்பட நிகழாதுலைவிதயிடத்து எ-று. '

1. கின்றுவரூஉம் கானும் மடனும் பெண் மையவாகலின் காமத்தினை பிற்கண் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயினான் என இயையும்,