பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் لبنان.

தேனிமிர் நறவின் தேறல் போல நீதர வந்த நிறையருந் துயரம் நின், ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது. பிறிதிற் lரா தென்பது பின்நின்று அறியக் கூறுதும் எழுமோ நெஞ்சே நாடுவளங் கொண்டு புகழ் நடுதல் வேண்டித்தன் ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் கொற்கையம் பெருந்துறை குனி திரை தொகுத்த விளங்கு முத் துறைக்கும் வெண்பல் பன்மாண் சாயல் பரதவர் மகட்கே.”

இதனுள், ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது பிறிதில் தீராது" என்பதனான் இயற்கைப் புணர்ச்சி இடையீடுபட்டுப் புணர்ச்சி கருதிக் கூறியவாறு காண்க.

'மயில்கொல் மடவாள் கொல் மாநீர்த் திரையுள்

பயில்வதோர் தெய்வங்கொல் கேளிர்-குயில்பயிரும்

கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய

கண்ணின் வருந்துமென் னெஞ்சு.” (திணைமொழி-சக) இதனுள் ஐயநிலையைப் பாங்கற்கு உரைத்தலின் புணர்ச்சி இன் றாயிற்று.

'கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப் புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப் பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவி லாட்டி அருளினும் அருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியன்மா. நெஞ்சே என்னது உம் அருந்துயர் அவலந் தீர்க்கும் மருந்து பிறிதில்லை யா னுற்ற நோய்க்கே."

(நற்றிணை-கசல்)

1. பாட்டிலும் உரையிலும் ‘ஆடுகொடி மருங்குனி னருளின் அல்லது οι ώστ 5 திருத்திக் கொள்ளுதல் பொருட்பொருத்தமுடையதாகும்.