பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா ச.அ. 等、

அஃதாவது.இடந்தலைப்பாடும்.பாங்கொடு தழாஅலுந் தோழி யிற் புணர்வுமாம். இவற்றின்கண்ணும் நானும் மடனும் நிகழு. மென்றான். இனித் தோழியிற் புணர்வின்கண் வரும் நானும் மடனுந் தந்தன்மை திரிந்துவருமென மேலிற் சூத்திரத்தாற் கூறுகின்றான், ! (கன்)

ஆய்வுரை

தலைவியின் வேட்கை குறிப்பினாலும், இடத்தினாலும் அன்றி கூற்றினால் வெளிப்படி:ாது என்பதே இந்நூற்பா நுதலிய பொருளாகும். தலைவியின் வேட்கை கூற்றினால் வெளிப்படாமைக்குக் காரணம் காட்டும் நிலையில் அமைந்தது,

'காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் தானு மடனும் பெண்மைய வாதலின்' என்னும் தொடராகும்.

காமத்திணையாகிய அன்பின் ஐந்திணை ஒழுகலாற்றில் கண்ணின் குறிப்புடன் ஒன்றி வெளிப்படும் நானும் மடனுமாகிய இவை பெண்மைக்குரிய நீங்காப் பண்புகளாதலின், தலைவியின் வேட்கை குறிப்பினானும் இடத்தினானும் அன்றிக் கூற்றினால் வெளிப்படும் அள்விற்குத் தலைவி மாட்டு மிக்குத் தோன்றுதல் இல்லை என்பதே இந்நூற்பாவின் பொருளாகும்.

இந்நூற்பாவில் கண்ணின்று வரூஉம் என்பதற்குத் தலைவியிடத்து நிலைபெற்று வருகின்ற எனப் பொருள் கூறுவர் இளம்பூரணர். முதலடியில் வந்த கண்ணின்று வரூஉம் என்ற தொடரை கண்ணின்று எனவும், வரூஉம் எனவும் இரண்டாகப் பிரித்து மூன்றா மடியிலுள்ள குறிப்பினும் என்பதன் முன்னும் பின்னும் இயைத்துக் கண்ணின்ற குறிப்பினும் வரூஉம் என நச்சினார்க்கினியர் வலிந்து பொருள் கூறுவர். குறிப்பினும் எனவே கண்ணினான் வரும் குறிப்பு என்பது தானே விளங்கும். இவ்வாறு இடர்ப்பட்டுச் சொற்களைப் பிரித்துக் கூட்ட வேண்டிய இன்றியமையாமையில்லை.

இந்நூற்பாவில் எழுவாயாக அமைந்தது வேட்கை. அவ்வேட்கை அவள்வயின் குறிப்பினும் இடத்தினும் அல்லது (கூற்றின்கண்)

1. மேலிற் சூத்திரமென்றது காம ஞ் சொல்லா நாட்ட மின்மையின்' என அடுத்து வரும் நூற்பர வினை.