பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

席虑总。 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

நெறிப்பூட வாரா என்பதே இங்குக் கூறும் பொருள். அங்ங்னம் வாராழைக்குக் காரணம் கூறுவதாக அமைந்த ஏதுமொழியே காமத்திணையிற் க்ண்ணின்று வரூஉம் நாணுமடனும் பெண்மைய வாதலின்' என்னும் தொட்ராகும். கண்ணின்று வருதலாவது கண்ணிலிருந்து புலப்படும் காமக் குறிப்பினுடனே நானுமடனும் ஒருங்கு இலுளிப்படுதல்,

ஆய்வுரை

ஒத்த அன்பினராய தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டுக் கண்ணுந்த நிலையில் தலைமகள்பால் வேட்கை தோன்றுமாறு கூறுகின்றது.

(இ=ள்.) அன்பின் ஐந்தினையொழுகலாற்றில் தலைமகளது கண்ணின் குறிப்புடன் ஒன்றி வெளிப்படும் நாணமும் மடினும் ஆகிய இவை புேண்மைக்குரிய இன்றியமையாப் பண்புகளாதலின், தலைவியின் வேட்கை, குறிப்பினாலும் இடத்தினாலும் அன்றிக் கூற்றினால் வெளிப்படுமளவுக்கு அவளிடத்தில் முறைமைப்பட மிக்குத் தோன்றுதல் இல்லை எ-று.

வேட்கை, குறிப்பினும் இடத்தினும் அல்லது அவள்வயின் நெறிப்பட வாரா என இயையும். தலைமகள் உள்ளத்தே தோன்றும் வேட்கை யுணர்வுகள் அவளது சொல்லால் வெளிப்படாமைக்குக் காரணம் கூறும் நிலையில் அமைந்தது.

':தசத் திணையிற் கண்ணின்று வரூஉம்

தானும் மடனும் பெண்மைய வாதலின்'

எனவருத் தொடராகும். காமத்திணை.காமப்புணர்ச்சி ; அன்பின் ஐந்தினையொழுகலாறு. கண் நின்று வருதலாவது கண்ணின் குறிப்புடன் ஒன்றிநின்று வெளிப்படுதல். பெண்மைய - பெண்மையிடத்தள குறிப்பு வினைமுற்று. அவள் என்றது தலைவியை.

கெ. காமஞ் சொல்லா நாட்டம் இன்மையின்

ஏமுற இரண்டும் உளவென மொழிப. இளம்பூரணம்

1. இரண்டும் என்றது. பெண்மைக்கு இன்றியமையாத கானும் மடனும் ஆகிய இரண்டினையும். இவை இரண்டும் தலைமகற்கு ஏமம் தருவன ஆதலால் 'ஏமுற இரண்டும் உளவென மொழிப' என்றார்.