பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露莎醬 தோல்காப்பியம்-பொருளதிகாரம்

தோழியிடத்துக் கூறுதல் அருமையுடைத்தல்லவாகை யினாலே; கூற்றுமொழி ஆன-குறிப்பானன்றிக் கூற்றாற் கூறும் மொழி தலைவிக்குப் பொருந்தின என்று, !

எதிர்தல் தன்றன்மை மாறுபடுதல். ஒன்றிய தோழி யொடு’ (தொல்-பொ-41) என அகத்திணையிற் கூறுதலானுந் தாயத்தி னடையா (தொல்-பொ.221) எனப் பொருளியலிற் கூறுதலானும், அவள்வயின் நானும் மடனும் நீங்கிய சொல்லைக் கூறுதலும் பொருந்து மென்றான்; அவை முற்காட்டிய உதாரணங்களுட் 'கூடுதல் வேட்கையாற் குறிபார்த்து’’ எனவும், வளைமுன்கை பற்றி நலியத் தெருமந் திட்டு' எனவும், காமநெரிதரக் இைந்நில் லாதே" எனவுங் கூறியவாற்றானும், மேற்கூறுகின்ற உதாரணங் களாலும், நானும் மடனும் நீங்கிக் கூற்று நிகழ்ந்தவாதுணர்க.

'சூத்திரத்துட்பொரு ளன்றியும் ...........படுமே (தோல்பொ-மர-103) என்பதனால், இவ்விலக்கணம் பெறுதற்கு, இம் மூன்று சூத்திரத்திற்கும் மாட்டுறுப்புப்படப் பொருள் கூறினாம்,

இனிக் கூற்று நிகழுங்கால், நானும் மடனும் பெண்மைய வாதலிற், குறிப்பினும் இடத்தினுமன்றி வேட்கை நெறிப்பட வாராவென்று பொருள் கூறிற், காட்டிய உதாரணங்கட்கு மாறுபாடாகலானுஞ், சான்றோர் செய்யுட்களெல்லாங் குறிப்பும் இடனுமன்றிப் பெரும்பான்மை கூற்றாய் வருதலானும், ஆசிரியர் தலைவன் கூற்றுந் தலைவி கூற்றுந் தோழிகூற்றுஞ் செவிலி கூற்றுமெனக் கூற்றுஞ் சேர்த்து நூல்செய்தலானும் அது பொருஒான்மையுணர்க." ~ : -

بیبیسیمه

1. சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின்

அல்ல கூற்றுமொழி யவள் வயினான'

என வரும் இச்சூத்திரத்தை எதிர் சொல் அவள் வயின் மொழிதல் அருமைத்தல்ல ஆதலின் கூற்றுமொழி ஆன' என இங்கனம் சொற்களைத் தாம் வேண்டியவாறு

பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்ளுதல் உரை கெறி பன்றாம்.